• India
```

நல்ல இலாபம் தரும் வகையில்...மொத்த மிட்டாய் கடை வைப்பது எப்படி...?

Whole Sale Mittai Shop Ideas Tamil

By Ramesh

Published on:  2024-10-13 06:07:24  |    487

Whole Sale Mittai Shop Ideas Tamil - சிறு குறு கடை வியாபாரிகள் மொத்த விலைக்கு பொருள்களை வாங்கும் வகையில், மொத்த மிட்டாய் கடை எப்படி வைப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Whole Sale Mittai Shop Ideas Tamil - பொதுவாக மொத்த மிட்டாய் கடை என்பது, கிராமங்களில், தெருக்களில், சந்தைகளில் கடை வைத்து இருப்பவர்கள் தங்கள் கடைக்கு தேவையான பொருள்களை மொத்தமாக வாங்கும் கடையாக பார்க்கப்படுகிறது. கொஞ்சம் முதலீடு அதிகமாக போட்டு, வியாபாரிகள் கேட்பதெல்லாம் இல்லை என்று சொல்லாமல், பிரம்மாண்ட கடையாக வைக்கும் போது வியாபாரிகள் உங்கள் நிறுவனத்தை தேடி வந்து வாங்கி செல்ல வாய்ப்பாக அமையும்.

சரி, மொத்த கடையில் என்ன என்ன இருக்க வேண்டும்?

வித விதமாக அப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் மிட்டாய் வகைகள், மசாலா வகைகள், தேயிலை, காபி தூள்கள், சுக்கு காபி பொடிகள், மொத்த ஸ்டேசனி ஐட்டங்கள், பாக்கு வகைகள், 90 கிட்ஸ் வகை மிட்டாய்கள், அப்பள வகைகள், சோயா, பானி பூரி பாக்கெட்டுகள், மசாலா கடலை வகை அட்டைகள், ஊறுகாய் வகைகள், ரஸ்னா பாக்கெட்டுகள், கெமிக்கல் எஸன்சுகள், சோப் வகைகள், எண்ணெய் பெட்டிகள், பேக்கிங் கவர்கள், அட்டை தட்டுகள், கார பண்டங்கள், இனிப்பு பண்டங்கள், ரெடிமேட் சப்பாத்தி, ரெடிமேட் பரோட்டா


பிரைஸ் அட்டைகள், ஸ்கிரப்பர் அட்டைகள், பன், பிரெட்டு பாக்கெட்டுகள், முறுக்கு டப்பா, அனைத்து பிஸ்கெட் வகைகள், டேபிள் விரிப்புகள், ஸ்பாஞ்சுகள், பாக்கு மர தட்டுகள், தண்ணீர் கிளாஸ்கள், டீ, காபி கிளாஸ்கள், கல்கண்டுகள்மற்றும் பேம்பர்ஸ், டூத் பேஸ்ட்கள், தண்ணீர் கேன்கள் (அனைத்து அளவும்), 10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ், பெப்சி, கோக் ஐட்டங்கள், பிங்கோ மற்றும் ஏனைய சிப்ஸ் வகைகள் என எல்லா வகைகளும் மொத்தமாகவும், வியாபாரிகள் மொத்த விலையிலும் வாங்க கூடிய வகையில் கொள்முதல் செய்து கொள்ள வேண்டும்.

பெரும்பாலும் மொத்த மிட்டாய் கடைகளில் எடை போடும் வகையில் எந்த பொருளும் இருக்காது, எல்லாமே பேக்கிங் செய்யப்பட்டதாக தான் இருக்கும், அவ்வாறாக எடை போட்டு வாங்கும் பொருளாக இருந்தால் அதை முன்னதாகவே 1 கிலோ பாக்கெட்டுக்களாக போட்டு வைத்து விடுவார்கள். கடையின் அளவு என்பது கிட்டதட்ட ஒரு கல்யாண மண்டபம் அளவிற்கு இருக்க வேண்டும், கூல்ட்ரிங்ஸ், தண்ணீர் கேன்கள், பிங்கோ பெட்டிகள் உள்ளிட்டவைகளை அட்டி போடுவதற்கே ஒரு தனி குடோன் தேவைப்படும். ஆதலால் விசாலமான நல்ல பார்வையான வகையில் ஒரு பெரிய கடை இருப்பது அவசியம்.


சரி, பொருள்களை எல்லாம் எங்கு கொள்முதல் செய்வது?

மிட்டாய் ஐட்டங்கள், பேப்பர் கப்கள், ஒகே, நூடுல்ஸ் உள்ளிட்ட லோக்கல் பொறி வகைகள் அனைத்திற்கும் மதுரை தான் ஒரு மிகப்பெரிய மார்க்கெட், ஒரு முறை நேரடியாக அங்கு சென்று கொள்முதல் செய்து விட்டு, அடுத்தடுத்த முறைகள் ஆர்டர்களை போன்களின் மூலம் போட்டுக் கொள்ளலாம், கம்பெனி ஐட்டங்களுக்கு டீலர்களே நேரடியாக வந்து ஆர்டர் எடுத்து விட்டு சென்று விடுவார்கள், 10 ரூபாய் கலர்களுக்கு டெய்லி அல்லது பொடரான் பிராண்டுகளிடம் டை அப் வைத்துக் கொள்வது நல்லது.

பெப்சி, கோக் மற்றும் பிஸ்கட்ஸ் டீலர்கள் எல்லாம் நேரடியாக கடைக்கே வந்து சரக்கை இறக்கி விட்டு சென்று விடுவார்கள், தண்ணீர் கேன்களுக்கு ஏதாவது லோக்கல் பிராண்டுகளுடன் டை அப் வைத்துக் கொள்ளலாம். லோக்கல் பிராண்டுகள் என்னும் போது 1 லி, 2 லி, 500 மிலி, 300 மிலி என அனைத்து வகைகளும் இருக்க வேண்டும், அகுவாஃபைனா, கின்லி, பிஸ்லெரி உள்ளிட்ட பிராண்டடு வாட்டர்கள் 1லி மற்றும் 2 லி மட்டும் வாங்கி வைத்தால் போதுமானது. ஒட்டு மொத்தமாக எதுவுமே நீங்கள் வெளியில் சென்று வாங்க வேண்டியதில்லை போனில் ஆர்டர் செய்தால் கடைக்கே வந்து இறக்கி விடுவார்கள்.



சரி, இலாபம் எப்படி இருக்கும்?

நல்ல நகரத்தின் மையத்தில் மார்க்கெட்டுகள் அருகில் நீங்கள் கடையை வைக்கும் போது, நாள் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் முதல் மூன்று இலட்சம் வரை சம்பாதிக்க முடியும், ஒரு மாதத்திற்கு 90 இலட்சங்கள் முதல் 1 கோடி வரை வியாபாரம் ஆகும், கடை வாடகை, ஊழியர்கள் சம்பளம், பொருட்கள் கொள்முதல் எல்லாம் போக மாதம் 25 இலட்சங்கள் முதல் 30 இலட்சங்கள் வரை இலாபம் மட்டும் தனியாக கையில் நிற்கும்.

" மொத்த கடைகளை பொறுத்த வரை நீங்கள் ஒரு 50 பைசா ஒரு பொருளில் கூட விலை வைத்து விற்றாலும் கூட வேறு கடைக்கு மாறி விடுவார்கள், விலை விஷயத்திலும், வாடிக்கையாளர்களை கணிவாக நடத்துவதிலும் அதிக கவனம் கொள்ள வேண்டும், கடைக்குள் வரும் வியாபாரிகள் நிலையாகும் போது தான் உங்களின் இலாபமும் மொத்த கடைகளில் நிலையாக இருக்கும் " 

Small Salon Business Ideas | Beauty Salon Business Ideas
Entrepreneur