Own Business in Tamil - நல்ல இலாபம் தரும் வகையில் Water Wash தொழில் எப்படி செய்வது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Own Business in Tamil- வாட்டர் வாஷ் என்பது கார்கள், பைக்குகள் மற்றும் சில வாகனங்களை சுத்தம் செய்யும் ஒரு தொழில் ஆகும், இதற்கு நல்ல அகலமான பரந்து விரிந்த ஒரு இடம் தேவைப்படும், இடத்தில் கூடாரம் போன்ற அமைப்பை ஏற்படுத்திக் கொள்வது நல்லது, ஆட்டோமேட்டிக் லிப்ட் ஜாக்கிகள், ப்ரஷ்ஷர் வாஷர்கள், Foam வாஷர்கள், மெசினரி டூல்கள், வாட்டர் டேங்குகள் உள்ளிட்ட அமைப்புகள் இந்த தொழிலுக்கு அவசியம்.
மெசினரிகள், டூல்ஸ்கள் அனைத்தையும் கோயம்புத்தூர் பொருளாதார சந்தைகளில் உங்களுக்கு ஏற்ற விலையில் வாங்கி கொள்ளலாம், நீங்கள் தொழிலுக்கு பழக்கமானவர்கள் எனில் மெசினரிகளை வாங்கி கொண்டு நீங்களே உங்களுக்கு ஏற்றவாறு செட் அப் செய்து கொள்ளலாம், போர் வாட்டர் இருந்தால் டேங்குகளில் எப்போதும் நீர் இருக்கும் படி ஏற்றிக் கொள்ள வேண்டும்.
செலவுகள் என்னும் போது மெசின்கள், டூல்ஸ்கள், எலக்ட்ரிக், ஹைட்ராலிக் ஜாக்கிகள், கடை செட்டப்புகள் என எல்லாம் சேர்த்து ஒரு 5 இலட்சங்களுக்குள் ஆகலாம், நீங்கள் வாங்கும் மெசின்களின் பவர்களை பொருத்து இந்த முதலீடு குறையவும் செய்யலாம் கூடவும் செய்யலாம், ஆனால் 5 இலட்சங்களே ஒரு வாட்டர் வாஷ் தொழிலை முழுவதுமாக தொடங்க போதுமானதாக இருக்கும்.
பொதுவாக பைக்குகளுக்கு ரூ 150 முதல் 200, கார்களுக்கு ரூ 300 முதல் 450, லாரிகளுக்கு ரூ 400 முதல் 500, Foam வாஷ்களுக்கு ரூ 450 முதல் 700 வரை வாங்குகிறார்கள், நீங்கள் சிறிய அளவில், ஒரு சிறிய பகுதிகளில் இந்த தொழிலை செய்திடும் போது தினசரி ரூ 3,000 வரை வருமானம் பார்க்க முடியும், அதே சமயத்தில் ஒரு பெரு நகரத்தில் செய்திடும் போது தினசரி ரூ 5,000 முதல் 7,000 வரை வருமானம் பார்க்க முடியும்.