Flower Knotting Business Ideas Tamil - பொதுவாக இதற்கு எந்த முதலீடும் தேவை இல்லை, ஸ்பீடாக பூ தொடுக்க தெரிந்தால் மட்டும் போதும், இது போக ஒரு சில பூ கடைகளிடம் கொள்முதலுக்காக பேசிக் கொள்வதும் நல்லது, நன்கு கட்ட தெரிந்தவர்கள் அரைமணி நேரத்தில் 1 கிலோ மல்லி தொடுப்பார்கள், 15 நிமிடத்தில் ஒரு மாலை தொடுப்பார்கள், 10 நிமிடத்தில் சரம் தொடுப்பார்கள், அரை மணி நேரத்தில் 1 கிலோ பிச்சி தொடுப்பார்கள்.
பொதுவாக பூ கடைக்காரர்கள் ஒரு கிலோ மல்லி தொடுக்க 60 ரூபாய் வரை கொடுப்பார்கள், 1 கிலோ பிச்சி தொடுக்க 45 ரூபாய் வரை கொடுப்பார்கள், சரம் தொடுக்க 15 முதல் 20 ரூபாய் வரை கொடுப்பார்கள், ஒரு மாலை தொடுக்க ரூ 20, மலர் பொக்கே செய்வதற்கு ரூ 30 வரை கொடுப்பார்கள், சில வீடுகளில் எல்லாம் பெண்கள் நாள் ஒன்றுக்கு 20 கிலோ வரை பூ தொடுக்கிறார்கள்.
நாள் ஒன்றுக்கு ஒரு 5 கிலோ மல்லி, 5 கிலோ பிச்சி, ஒரு 5 மாலை, ஒரு 10 கிலோ சரம் தொடுபீர்களேயானால் நாள் ஒன்றுக்கு ரூ 700 முதல் 850 வரை சம்பாதிக்க முடியும், ஒரே கடைகளில் இத்துனை ஆர்டர்கள் எடுப்பது கடினம், ஒரு நான்கைந்து கடைகளில் பேசி வைத்துக் கொண்டு அங்கிருந்து தினசரி கொள்முதல் செய்து கொள்ள வேண்டும், அப்போது தான் ஆர்டர்கள் நிறைய வரும்.
இது போக பண்டிகை சமயங்களில் தொடுப்பதற்கான கூலி அதிகமாக கொடுக்கப்படும், நார்மலான நாட்களில் தினசரி ஒரு ரூ 700 கிடைக்கிறதென்றால், பண்டிகை சமயங்களில் ரூ 1000 முதல் 1200 வரை சம்பாதிக்க முடியும், மாதம் சராசரியாக ரூ 25,000 நிச்சயம் சம்பாதிக்க முடியும், அதற்கு மேலும் சம்பாதிக்க வேண்டும் என்றால் நிறைய கடைகளில் ஆர்டர் எடுத்து வீட்டில் இருக்கும் ஒரு சிலரையும் தொடுத்தலில் உட்படுத்த வேண்டும்.