Steel Shop Business-பொதுவாக மெட்டல் ஷாப் என்பது வேறு ஒன்றும் இல்லை, வீட்டு உபயோக பொருள்களின் விற்பனை மையம் ஆகும் வீட்டிற்கு தேவையான பிளாஸ்டிக், எவர்சில்வர், பித்தளை மற்றும் அலுமினிய பொருள்களை மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்யும் ஒரு அங்கம்.
சரி, மெட்டல் ஷாப் வைப்பது எப்படி?
முதலில் மெட்டல் கடை வைப்பதற்கு ஒரு பெரிய அகலமான இடம் தேவை, மெட்டல் கடை வைக்கிறோம் என சொல்லி மாநகராட்சி அல்லது பேரூராட்சியில் பதிவு செய்து கொள்வது அவசியம் ஆகிறது. நீங்கள் மொத்த கடை வைக்க வேண்டும் என்றால் நேரடியாக தயாரிக்கும் தொழிற்சாலைகளில் சென்றே முதல் முறை கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் ஒரு முறை மட்டும் நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்கும், அதற்கு பின்னர் கால் செய்து இந்த சரக்கு தேவை என்றால் அவர்களே லாரி செட்டில் போட்டு விட்டு விடுவார்கள்.
சரி, எவ்வளவு முதலீடு போட வேண்டும்?
அலங்காரமாக பெரிய அளவில் வைக்க வேண்டும் எனில் குறைந்தபட்சம் 50 இலட்சம் முதல் 90 இலட்சம் வரை முதலீடு அவசியம், உங்களிடம் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட இடம் இருக்கும் பட்சத்தில் அதனை ஆவணமாக வைத்துக் கொண்டு வங்கிகளில் கடனாகவும் பெற்றுக்கொள்ளலாம், முதலீட்டை எடுத்து விட முடியுமா என்றால், இரண்டு வருடத்திலேயே எடுத்து நிறுவனத்தை இலாபகரமானதாக மாற்றி விட முடியும்.
சரி, எவ்வளவு இலாபம் இருக்கும்?
பொதுவாக புது எவர் சில்வர் பாத்திரங்களை பொறுத்தவரை மொத்தமாக கொள்முதல் செய்யும் போது கிலோ 250 முதல் 440 வரை, அலுமினியக்கலவை, பியூர் அலுமினியம் பாத்திரங்கள் கிலோ 320 முதல் 450 ரூபாய் வரை மொத்த விலைக்கு கொள்முதல் செய்ய முடியும், பித்தளை பாத்திரங்களை வரை மொத்த விலைக்கு கொள்முதல் செய்யும் போது கிலோ ரூபாய் 800 முதல் 1000 ரூபாய் வரை வாங்க முடியும், செம்பு பாத்திரங்களை பொறுத்தவரை கிலோ ரூபாய் 1200 முதல் 1500 வரை மொத்த விலைக்கு வாங்க முடியும்.
பொதுவாக வியாபாரிகளுக்கு என்று விற்கும் போது, அனைத்து சில்வர், அலுமினிய பாத்திரங்களை வாங்கிய விலையில் இருந்து கிலோ 150 ரூபாய் என இலாபம் நிர்ணயித்து இலாபம் பார்ப்பார்கள், இதுவே ரீட்டைல் சேல் என்னும் போது ஒரு கிலோவிற்கு 250 ரூபாய் வரை இலாபம் நிர்ணயித்து இலாபம் பார்ப்பார்கள். பிளாஸ்டிக் பொருள்களை பொறுத்த அதில் போட்டு இருக்கும் எம்ஆர்பி விலையை விட மொத்த கடைக்காரரகளுக்கு பாதிக்கும் குறைவாக தான் கொடுப்பார்கள், அவர்கள் அதில் 20 சதவிகிதம் டிஸ்கவுண்ட் என்பது போல ஒட்டு நல்ல விலைக்கு விற்று விடுவார்கள்.
இது போக கல்யாண வீட்டு சீதனங்கள், பூப்புனித வீட்டு சீதனங்கள், பால்காய்ப்பு வீட்டு சாதனங்கள் என அதற்கு தனி தனியாக ஆஃபர்கள் எல்லாம் போட்டு விற்கும் கடைகளும் இருக்கிறது, அவ்வாறாக ஒரு சீதன காம்போ விற்ராலும் அதில் 30,000 முதல் 40,000 வரை இலாபம் இருக்கும் என கூறப்படுகிறது. ஒட்டு மொத்தமாக மெட்டல் ஷாப் ஒரு நல்ல இலாபம் தரும் தொழில் தான், நல்ல டவுணில் இருக்கும் இடங்களில் இருக்கும் மெட்டல் ஷாப்கள் நாள் ஒன்றுக்கு 2 இலட்சம் முதல் 4 இலட்சம் வரை தினசரி சம்பாதிக்கின்றன. மாதத்திற்கு என்று பார்க்கும் போது 60 இலட்சங்கள் முதல் 90 இலட்சங்கள் வரை சம்பாதிக்கின்றன.