Coconut Business Ideas-தென்னை என்பது ஒரு நூற்றாண்டுக்கு இலாபம் தரும் பயிர், விதைத்து விட்டு ஒரு மூன்று முதல் ஏழு வருடம் வரை பொறுத்தால் சாகுபடிக்கு தயாராகி விடலாம்.
தமிழகத்தை பொறுத்தவரை தென்னை அதிகமாக காணப்படும் பகுதியாக அறியப்படுவது உடன்குடி,கன்னியாகுமரி மற்றும் பொள்ளாச்சி பகுதிகள் தான், இந்த தென்னை வளர்ப்பில் அதிக இலாபம் கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடைக்கும். ஆனால் நட்டவுடனே சாகுபடியை எதிர்பார்க்க கூடாது, நட்டவுடன் குறைந்தபட்சம் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை பொறுத்து தான் சாகுபடியை துவங்க முடியும்.
சரி, தென்னை பயிரிடல் எப்படி செய்யலாம்?
தென்னையை பொறுத்தவரை நெட்டை*குட்டை, குட்டை* நெட்டை, நெட்டை என மூன்று ரகங்கள் உண்டு, ஒவ்வொரு ரகத்திற்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கும், இந்த ரகங்களை நீங்கள் வேளாண் மையம் ஏதேனும் உங்கள் அருகில் இருப்பின் அங்கு சென்று கொள்முதல் செய்து கொள்ளலாம், கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தளம் என்ற பகுதிக்கு அருகில் தென்னை கன்றுகளுக்காகவே ஒரு நாற்றுப்பண்ணை இருப்பது குறிப்பிடத்தக்கது, பொதுவாக தென்னை பயிரிடுபவர்கள் இங்கு வந்து கன்றுகளை வாங்கி செல்வது வழக்கம்.
தென்னைய பொறுத்தவரை வறண்ட பயிர் தான், எத்தகைய சூழலிலும் வளரும் தன்மை உடையது, உங்களிடம் நீண்ட நெடிய நிலம் மட்டும் இருந்தால் போதும், கன்றுகளை நட்டு ஒரு ஒரு வருடம் மட்டும் நன்கு பராமரித்தல் அவசியம், உடனடி மகசூல் வேண்டுமானால் குட்டை * நெட்டை ரகத்தை பயிரிடலாம், மூன்று முதல் 4 வருடங்களிலேயே தேங்காய் காய்க்க ஆரம்பித்து விடும், நெட்டை * குட்டை ரகத்தை எடுத்துக் கொண்டால் 4 முதல் 5 வருடங்களில் காய் காய்க்க ஆரம்பிக்கும். நெட்டை ரகம் காய்க்க 7 வருடங்கள் ஆவது ஆகும்.
சரி, இலாபம் எப்படி இருக்கும்?
தென்னையை பொறுத்தவரை குறைந்த பட்சம் ஒரு ஏழு ஆண்டுகள் பொறுத்து வளர்த்தால் உங்களுக்கு அது ஊறிக் கொண்டே இருக்கும் ஒரு தங்க ஊற்று தான், தென்னையில் அனைத்துமே இலாபம் தான், இலை நாருக்கு செல்லும், ஈக்குச்சி வாரியலுக்கு செல்லும், இளநீர் குளிர்பான கடைகளுக்கு செல்லும், தேங்காய் பல சரக்கு கடைகளுக்கு செல்லும், ஒட்டு மொத்தமாக ஒரு முறை கன்று நட்டால் ஏழு வருடம் கழித்து ஒரு 100 வருடத்திற்கு சாகுபடி செய்யலாம்,
தென்னங்கன்றுகளை மட்டும் விற்கும் தமிழக அரசின் மாவட்ட வேளாண் தோட்டக்கலையே வருடத்திற்கு 37.83 இலட்சம் இலாபம் பார்க்கிறதாம். அப்படி என்றால் தென்னை எவ்வளவு இலாபம் தரும் என்று யோசித்து பாருங்கள், ஒரு 7 வருடம் காத்திருந்தால் 100 வருடத்திற்கு நீங்கள் தான் இலட்சாதிபதி, உட்கார்ந்த இடத்தில் தேங்காய்களை பறித்துப்போட்டால் நேரடியாக தோட்டத்திற்கே வந்து கொள்முதல் செய்து விட்டு செல்வார்கள்.