Startup Business Ideas in Tamil- ஒரு பேஷன் பிராண்டை ரூ.5 லட்சம் கடனில் ஆரம்பித்து, இன்று ரூ.150 கோடி வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியவர் போஜ்ராஜ் நவானி. இவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர், சிறுவயதில் இருந்து ஆடை வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர். தற்போது, அவரின் நிறுவனம் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த போஜ்ராஜ் நவானி, சிறுவயதிலேயே ஆடை வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர். தனது நண்பர்களுக்கான ஆடைகளை அவர் தேர்ந்தெடுப்பார். கல்லூரி படிப்புக்கு பிறகு, 1995-ம் ஆண்டு "சாரி மேடம்" என்ற பெயரில் ஆண்களுக்கான ஒரு கடையை தொடங்கி, அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
2003-ம் ஆண்டில், தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்பதற்காக மும்பைக்கு சென்றார்.பிறகு,2008-ம் ஆண்டு ரூ.5 லட்சம் கடன் வாங்கி, "நோஸ்ட்ரம் ஃபேஷன் பிரைவேட் லிமிடெட்" என்ற ஆண்களுக்கான ஆடை நிறுவனத்தை நிறுவினார்.
2007-ம் ஆண்டு அறிமுகம் செய்த லைக்ரா ஜீன்ஸ், இவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. தற்போது, அவரது நிறுவனம் இந்தியாவின் பல பகுதிகளில் செயல்பட்டு, ஆண்களுக்கான ஜீன்ஸ்கள், ஜாக்கெட்டுகள், டி-ஷர்ட்கள் ஆகியவற்றை விற்பனை செய்கிறது.
மேலும், மும்பையில் 250 பேர் அவரது அலுவலகத்தில் பணியாற்றுகிறார்கள், மேலும் அவரது நிறுவனத்தின் வருமானம் ரூ.150 கோடியை எட்டியுள்ளது.