• India
```

சிறிய இளநீர் கடை போதும்...மாதம் ரூ 30000 வரை இலாபம் பார்க்கலாம்...!

Elaneer Shop Ideas Tamil

By Ramesh

Published on:  2024-12-06 19:02:46  |    1265

Elaneer Shop Ideas Tamil - நல்ல இலாபம் தரும் வகையில் இளநீர் கடை அமைப்பது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Elaneer Shop Ideas Tamil - உலகளாவிய அளவில் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இந்தியா இந்த மூன்று நாடுகள் தான் உலகின் 72% தேங்காய் தேவையை பூர்த்தி செய்கின்றன, அந்த வகையில் இந்தியாவும் ஒரு டாப் தேங்காய் உற்பத்தி நாடு தான், இந்தியாவிற்குள் என்று எடுத்துக் கொண்டால் ஒட்டு மொத்த தேங்காய் உற்பத்தியில் கர்நாடகா முதலிடமும், தமிழகம் இரண்டாம் இடத்தையும் பெறுகின்றது.

சரி, தற்போது இளநீருக்கு வருவோம், தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இளநீரை ஏற்றுமதி செய்வது கோயம்புத்தூர் தான், அதற்கு அடுத்ததாக திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல் மாவட்டங்கள் இருக்கின்றன, ஒரு சில தென் மாவட்டதாரர்கள் கேரளாவில் இருந்தும் இளநீர் தேங்காயை இறக்குமதி செய்கின்றனர், இளநீர் ஒரு தூய்மையான மற்றும் மருத்துவ குணம் மிக்க இயற்கை பானமாக அறியப்படுகிறது.



சரி,முதலில் இந்த இளநீரை தொழிலாக செய்ய வேண்டுமானால், முதலில் கொள்முதல் உங்களுக்கு எங்கு வசதியோ அங்கிருந்து கொள்முதல் செய்து கொள்ளலாம், பொதுவாக மொத்த கொள்முதல் விளையில் சாத இளநீர் 20 முதல் 25 ரூபாய் வரை தருகிறார்கள், செவ்விளநீர் 30 முதல் 35 ரூபாய் வரையிலும் மொத்த விலைக்கு தருகிறார்கள், நேரடியாக கொள்முதல் செய்தால் இன்னும் அடித்து விலை பேசலாம்.

இளநீர் கடை என்பது ஏதாவது மருத்துவமனை அருகில் நீங்கள் வைத்தால், தினசரி 100 இளநீர் வரை விற்கமுடியும், பொதுச் சந்தைகளை விட மருத்துவமனை அருகே வைக்கும் போது விற்பனை எப்போதும் இருக்கும், நாள் ஒன்றுக்கு ஒரு 100 இளநீர் விற்பனை செய்கிறீர்கள் என்றால் தினசரி ரூ 3000 முதல் 4000 வரை வருமானம் ஈட்டலாம், அதில் இலாபம் மட்டும் தனியாக ரூ 1000 முதல் 1200 வரை இருக்கும்.

" ஒரு சிலர் மொத்தமாக இளநீரை ஆயிரக்கணக்கில் கொள்முதல் செய்து பல இடங்களில் கடைகள் போட்டு விற்கின்றனர், அப்படி விற்கும் போது இத்தொழில் இன்னமும் கூட இலாபம் அதிகமாக பார்க்க முடியும் "