Padhaneer Kudil Business Ideas - பனை மரம் மூலம் எந்தெந்த வகையில் தொழில் ரீதியாக இலாபம் பார்க்க முடியும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Padhaneer Kudil Business Ideas - பொதுவாக தூத்துக்குடியில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் பாதைகளில் மேல்மந்தை, வேம்பார் என்று ஊர்கள் இருக்கும், அந்த ஊர்கள் முழுக்க பனைமரமும், பதநீர் குடில்களும் நிறைந்து இருக்கும், பெரும்பாலும் அதை மட்டுமே குடிலிட்டு தொழிலாக செய்பவர்கள் பலரும் அந்த பகுதியில் உண்டு, ஒரு சிலர் கருப்பட்டிக்காக பதநீரை கொடுப்பதும் உண்டு.
எப்படிப்பார்த்தாலும் மஞ்சரி, ஓலை, பதநீர், பனம்பழம், நொங்கு என எல்லா வகைகளிலும் இலாபம் தரக்குடியது பனை மரம், ஒரு பனை மரம் கிட்டதட்ட 150 வருடம் வரை பதநீர் சுரக்கும், ஆண், பெண் என இரண்டு மரங்களுமே பதநீர் தரும், ஒரு வருடத்திற்கு கிட்டதட்ட 150 லிட்டர் வரை ஒரு பனை மரம் மட்டுமே பதநீர் சுரக்கும், பருவ காலங்களில் நாள் ஒன்றுக்கு மட்டுமே 12 லிட்டர் வரை ஒரு பனைமரத்தில் பதநீர் எடுக்க முடியும்.
பதநீரில் பலவகையாக நன்மைகள் இருக்கின்றன, உடல் ரீதியாக மருத்துவ ரீதியாக பல பலன்களை தரக்கூடியது பதநீர், உடல் உஷ்ணம், வயிற்றுப்புண், குடலியக்கங்களை மேம்படுத்துதல், கால்சிய சத்துக்களை மேம்படுத்துதல் என பல பிரச்சினைகளை கையாளும் சிறந்த பானமாக பதநீர் விளங்குவதால் மக்களிடையே பதனீருக்கான டிமாண்ட் அதிகரித்து இருக்கிறது.
பொதுவாக பனைமரம் வைத்து இருப்பவர்கள் அதன் அருகிலேயே ஒரு குடில் போட்டு பதநீர், பனம்பழம், நுங்கு, கருப்பட்டி உள்ளிட்டவைகளை விற்று வருகின்றனர், பொதுவாக பதநீர் சந்தைகளில் ஒரு லிட்டர் ரூ 60 முதல் 120 வரை விற்கிறார்கள், நுங்கு மூன்று ரூ 20 வரை விற்கிறார்கள், கருப்பட்டி கிலோ ரூ 300 முதல் 400 வரை விற்கிறார்கள், எப்படி பார்த்தாலும் மாதம் ஒரு குடிலுக்கு மாதம் ரூ 30,000 வரை வருமானம் பார்க்க முடியும்.
" பெரிதாக எந்த ஒரு முதலீடும் பராமரிப்பும் பனை மரத்திற்கு தேவை இல்லை என்பதால், பதநீர் குடில் மூலம் உங்கள் கைகளுக்கு வரும் பணம் அத்துனையும் இலாபம் தான் "