Business Opportunities in Amla Cultivation - நல்ல இலாபம் தரும் வகையில் நெல்லி தோட்டம் அமைத்து நெல்லிகளை முறையாக சந்தைப்படுத்துவது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Business Opportunities in Amla Cultivation - பொதுவாக நெல்லிக்காய் என்பது மிக மிக மருத்துவ குணம் மிக்கது, பல ஹெர்பல் பொருள்களிலும், ஆயுர்வேத மருந்துகளிலும் நெல்லிக்காயின் இடம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது, உலகளாவிய அளவில் நெல்லிக்காயின் சந்தை மதிப்பு கடந்த 2023 யில் மட்டும் 700 மில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது, உலகளாவிய அளவில் இந்தியாவில் இருந்து 90% நெல்லிக்காய்கள் சந்தைக்கு வருகிறதாம்.
உங்களிடம் நெல்லிக்காய் தோட்டமாக இருக்கும் பட்சத்தில் நேரடியாக சந்தைக்குள் இறங்கலாம், தோட்டம் அமைக்க இருக்கிறீர்கள் என்றால் மித வெப்ப காலங்களில் அமைக்கலாம், நெல்லி வளர்ந்து காய்ப்பதற்கு 5 வருடங்கள் வரை ஆகலாம், ஒரு மரம் வருடத்திற்கு 100 கிலோ நெல்லியை தர வல்லது, உங்கள் தோட்டத்தில் ஒரு 50 மரங்கள் நடுகிறீர்கள் என்றால் வருடத்திற்கு 5000 கிலோ அறுவடை செய்யலாம்.
பொதுவாக சந்தைகளில் ஒரு கிலோ மலை நெல்லி ஆனது 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது, தெர்பல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களிலும் நல்ல விலைக்கு எடுக்கிறார்கள், 50 மரத்தில் ஒரு தோட்டம் அமைக்கும் பட்சத்தில் 5,000 கிலோ அறுவடை என்னும் போது சராசரியாக வருடத்திற்கு 10 இலட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும், மாதத்திற்கு 83,000 ரூபாய் வரை வருமானம் பார்க்க முடியும்.
இந்த நெல்லி பயிரிடுதலில் சந்தைப்படுத்துதல் என்பது மிக மிக முக்கியமான கட்டம் ஆக பார்க்கப்படுகிறது, நீங்கள் உள்ளூரிலேயே சந்தைப்படுத்துகிறீர்கள் என்றால் பழக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்டவைகளுக்கு நேரடியாக சென்று ஆர்டர்கள் வாங்கிக் கொள்ளலாம், வெளியூர்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் கூட ஏற்றுமதி செய்யலாம், அங்கு நல்ல விலை கிடைக்கும்.
" எப்படி பார்த்தாலும் சராசரி இலாபம் என்பது நெல்லி தோட்டத்தின் மூலம் மாதத்திற்கு ரூ 50,000 வரை கிடைக்கும், அதிகபட்சமாக ரூ 90,000 முதல் 1,00,00 வரையிலும் இலாபம் பார்க்கலாம், ஒரு முறை பயிரிட்டால் 70 வருடங்கள் நீங்கள் இலட்சாதிபதி தான் "