How To Start Wholesale Rice Business -பாடசாலை கட்டணத்திற்கு வழியில்லாமல் தவித்த சையத் மொக்தார் அல்-புகாரி, இன்று ரூ.10,000 கோடி சொத்துகள் கொண்டுள்ளார்.சமூக சேவையில் அவரது பங்களிப்புகள், பலரின் வாழ்க்கையை மாற்றியுள்ளன.
மலேசியாவின் Kedah பகுதியில் ஏழை குடும்பத்தில் பிறந்த அல்புகாரி, தனது வாழ்க்கையை மாற்றியெழுப்பும் சவால்களை எதிர்கொண்டுள்ளார். ஒரு காலத்தில், குடும்பத்தின் கால்நடை வியாபாரம் தடுமாறி, தேர்வுக்கு கட்டணம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
பிறகு, நம்பிக்கை இழக்காமல், அல்புகாரி அரிசி வியாபாரியாக வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு, கட்டுமானம், கார் விற்பனை மற்றும் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு தொழில்முயற்சிகளை முன்னெடுத்து, தொழில் வெற்றிகளைப் பெற்றார்.
இப்போது, மலேசியாவில் 11வது பெரிய கோடீஸ்வரராகக் கருதப்படும் அல்புகாரியின் மொத்த சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.10,000 கோடியெனக் கூறப்படுகிறது.
மேலும், அவர் தொழிலில் வெற்றி பெற்றதோடு, சமூக சேவையிலும் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார். இப்போது, 500 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை அனாதைகள், அகதிகள் மற்றும் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக அளித்திருகிறார். இதனால், உலகளாவிய விருதுகள் மற்றும் சமூக நன்மதிப்புகளைப் பெற்றுள்ளார்.