Home Business Ideas for Women in Tamil - நல்ல இலாபம் தரும் வகையில் ஆரி வொர்க் பிசினஸ் எப்படி செய்வது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Home Business Ideas for Women in Tamil - பொதுவாக ஆரி வொர்க் என்பது டெய்லரிங்கில் ஒரு பகுதி, ஆனால் டெய்லரிங் அல்ல, டெய்லரிங்கை காட்டிலும் கொஞ்சம் மூளையை பயன்படுத்த வேண்டிய ஒரு வேலை, பெரும்பாலும் பெண்களே இந்த தொழில் செய்து வருகின்றனர், கொஞ்சம் வேலைப்பாடும், மூளையும் மிகுந்த தொழில், பொறுமை முக்கியம் என்பதால் பெண்களே இந்த தொழிலுக்கு ஆகச்சிறந்தவர்கள்.
ஓரு தையல் மெசின், ஒரு கையூசி, ஒரு முழுமையான நூல் டப்பா, இது போக ஆரி வொர்க்குக்கு தேவையான குட்டி குட்டி பாசிகள் தற்போதெல்லாம் எல்லா பேன்சி கடைகளிலும் கிடைக்கின்றன, இல்லையேல் ஆன்லைனில் ஆரி வொர்க்கிற்காகவே மொத்த டூல்ஸ் கிடைக்கிறது, அதை ஆர்டர் செய்து கொள்ளலாம், இவை அனைத்தும் தான் ஆரி வொர்க் தொழிலுக்கான முதலீடுகள்.
பொதுவாக ஒரு சிம்பிளான ஆரி வொர்க்கிற்கே தற்போது ரூ 1,500 முதல் 2500 வரை கேட்கின்றனர், கல்யாண ஆரி வொர்க்கிற்கெல்லாம் ரூ 10,000 வரை வசூலிக்கப்படுகிறது, பொதுவாக அது செலவுக்கான இலாபம் என்பது அல்ல, மூளைக்கான வருமானம், நீங்கள் எப்படி கிரியேட்டிவாக யோசித்து ஒரு ஆரி வொர்க் செய்கிறீர்களோ அதை பொறுத்து உங்களுக்கு வருமானம்.
நீங்கள் தெளிவாக கிராண்டாக ஆரி வொர்க் செய்து கொடுக்கும் பட்சத்தில், அடுத்தடுத்து உங்களுக்கு ஆர்டர்கள் வந்து கொண்டே இருக்கும், மாதத்திற்கு ஒரு 10 முதல் 15 ஆர்டர்கள் வந்தால் கூட ரூ 40,000 முதல் 50,000 வரை சம்பாதிக்க முடியும், ஈ காமெர்ஸ் வெப்சைட்டுகளிலும், இன்ஸ்டாக்களிலும் விளம்பரங்களாக போட்டும் கூட உங்களது திறமை மிக்க வொர்க்கை சந்தைப்படுத்தினால் அதுவும் ஒரு இலாபமாக மாறும்,