Fruit Shop Business Ideas Tamil - நல்ல இலாபம் தரும் வகையில் பிரம்மாண்டமான பழக்கடை எப்படி வைப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Fruit Shop Business Ideas Tamil - பொதுவாகவே பழக்கடை என்பது நட்டம் தரக்கூடிய ஒரு தொழிலாக பார்க்கப்படுகிறது, ஆனால் அது உண்மை இல்லை, பழக்கடையை சரியாக திறனாக செயல்படுத்தும் போது அது நல்ல இலாபம் தரும் தொழிலாகவே அமையும், அதற்கு சரியான செட் அப் அமைப்பது அவசியம், இது போக சரியான பழ டீலர்கள், லோக்கல் தோட்டக்காரர்கள் இவர்களை எல்லாம் கைக்குள் வைத்திருப்பது அவசியம்.
பழக்கடை முதலீடு என்ன, அமைப்பது எப்படி?
பழக்கடையை பொதுவாக வெட்ட வெளியில் தான் அனைவரும் அமைப்பார்கள், ஆனால் அவ்வாறு வைக்கும் போது பழங்கள் சுகாதாரமற்றதாக மாற வாய்ப்புகள் அதிகம், அதனால் கடையை முழுக்க முழுக்க கண்ணாடி செட் அப்பிற்குள் ப்ரீசர் வசதியுடன் அமைப்பது நல்லது, முதலில் பழங்களை உங்களது ஊர்களில் தோட்டங்கள் அமைத்து இருப்பவர்களிடம் கொள்முதல் செய்ய வேண்டும், வாழை, நெல்லி, மா, நாவல் பழம் உள்ளிட்டவைகள் லோக்கல் வேளாண் தோட்டங்களிலேயே கிடைக்கும்.
பிற பழங்களை கொள்முதல் செய்வதற்கு தான் உங்களுக்கு டீலர்கள் தேவைப்படுவார்கள், டீலர்களை நீங்கள் இரண்டு முறையில் அணுகலாம், ஒன்று இந்தியாமார்ட், இன்னொன்று நேரடி முறை, இந்தியாமார்ட் வெப்சைட்டில் Fruit Dealers என்று தேடினால் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இருக்கும் பழ டீலர்களின் மொபைல் எண் கிடைக்கும், லோக்கல் டீலர்களிடமும் அவர்களிடமும் விலையை கேட்டு எது சரி வரும் என்பதை யோசித்து அவர்களிடமே நீங்கள் கொள்முதல் செய்து கொள்ளலாம்.
பழங்களை பொறுத்தவரை கெமிக்கல், கல் வைத்து பழுக்க வைத்த பழங்களை தவிர்ப்பது நல்லது, முடிந்த வரை அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும், ஒரு பழக்க்கடை பிரம்மாண்டமாக வைப்பதற்கு லைட்டிங், போர்டுகள், கண்ணாடி செட் அப், பர்னிச்சர்ஸ், ப்ரீசர்ஸ் என எல்லாம் சேர்த்து ஒரு 5 இலட்சங்கள் ஆகும், சரக்குகள் கடையில் நிரப்புவதற்கு ஒரு 3 முதல் 5 இலட்சங்கள் வரை ஆகும். ரிஜிஸ்ட்ரேசன், உணவு பாதுகாப்பு துறை அனுமது, கடை அமைப்பு, சரக்குகள் ஏற்றம் என எல்லாம் சேர்த்து எப்படியும் ஒரு 10 இலட்சங்கள் கையில் இருப்பது நல்லது.
சரி, இலாபம் எப்படி இருக்கும்?
பழக்கடையை பொருத்தமட்டில் சீசன்கள் குறித்த அனுபவம் நிச்சயம் வேண்டும், அந்தந்த சீசன்களில் அதிகமாக ஓடக்கூடிய பழங்களை கொள்முதல் செய்து வைப்பது அவசியம், பழங்களை பொறுத்தவரை ஒரு கிலோவிற்கு 100 சதவிகிதம் வரை இலாபம் இருக்கும், பழக்கடையை பொறுத்தமட்டில் நட்டங்களை (வேஸ்ட் ஆகாமல்) குறைக்க தெரிந்தால் நல்ல இலாபகரமான தொழில். இலாபங்களை மட்டும் ஒரு 30 சதவிகிதம் குறைத்துக் கொண்டு வாடிக்கையாளர்களை பெருக்கும் பட்சத்தில் மாதத்திற்கு 5 இலட்சங்கள் வரை இலாபம் மட்டுமே தனியாக இருக்கும்.