• India

மாதம் ரூ 40000 வரை வருமானம் தரும்...மெசினரி டூல்ஸ் வாடகை கடை...எப்படி வைப்பது...?

Power Tools Rental Shop Ideas Tamil

By Ramesh

Published on:  2024-11-27 12:01:43  |    406

Power Tools Rental Shop Ideas Tamil - கட்டுமான வேலைகள், எலக்ட்ரிக் வேலைகள், டைல்ஸ் பதிப்பு, சீலிங் வேலைகள் உள்ளிட்டவைகள் பொதுவாக எல்லா இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும், அந்த வேலையை செய்யும் தொழிலாளிகள் அந்த வேலைக்கான எல்லா மெசினரிகளும் வைத்து இருப்பார்களா என்றால் நிச்சயம் இல்லை, ஒரு நாள், இரண்டு நாள் வேலைக்காக வாடகைக்கு எடுத்துக் கொள்வார்கள்.

இதற்காகவே சந்தைகளில் பல மெசினரி டூல்ஸ் வாடகை கடைகள் இருக்கின்றன, பொதுவாக மெசினரி கடைகளில் ட்ரில்லிங் மெசின், பவர் மற்றும் ஹேண்ட் டூல்கள், பவர் கான்க்ரீட் மிக்ஸர்கள், டைல்ஸ் கட்டர், ஏணிகள், குதிரைகள், சுத்தியல்கள், கடப்பாறைகள், எலக்ட்ர்க் ஒயர் பாக்ஸ்கள், சிமெண்ட் சட்டிகள், தேய்ப்பான் கரண்டிகள், பாதரச மானிகள் என அனைத்தும் இருக்க வேண்டும்.



குறைந்தபட்சம் சந்தைகளில் அடிக்கடி கட்டுமானத்திற்கு தேவைப்படுகிற அனைத்து பொருள்களும் கடைகளில் இருக்க வேண்டும், ஒரு 5 முதல் 7 இலட்சம் வரை முதலீடு செய்தால் அனைத்து அத்தியாவசிய மெசினரி டூல்களும் வாங்கி விடலாம், கடை முக்கியமாக ஏதாவது மத்திய சந்தையில் இருப்பது அவசியம், நல்ல அகலமான பரந்து விரிந்த இடம் இருப்பது அவசியம்.

இலாபத்தை பொறுத்தவரை சின்ன சின்ன டூல்களுக்கு தினசரி வாடகை ரூ 100 முதல் 150 வரை வசூலிக்கிறார்கள், பெரிய டூல்களுக்கு ரூ 200 முதல் 350 வரை வசூலிக்கிறார்கள், இது போக ஏணி, குதிரை, சிமெண்ட் சட்டி என ஒவ்வொன்றுக்கும் ரூ 40 முதல் 80 வரை வாடகை விதிக்கிறார்கள், ஒரே முறை முதலீடு போட்டால் போதும், மாதம் ரூ 40,000 வரை வருமானம் வந்து கொண்டே இருக்கும்.