• India
```

நல்ல இலாபம் தரும் உப்பு கொள்முதல் தொழில், எப்படி துவங்குவது?

 Salt Business in India | How to Start Salt Business

By Dharani S

Published on:  2024-09-28 14:07:27  |    370

உப்பை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து, அதை பேக்கிங் செய்து, வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மார்க்கெட்டிங் செய்வதன் மூலம் நல்ல இலாபம் பார்க்க முடியும்.

சரி, முதலில் எப்படி உப்பை கொள்முதல் செய்வது?

பெரும்பாலும் உப்பு என்றாலே அது தூத்துக்குடி தான், உப்பு பெரும்பாலும் ஏற்றுமதி ஆவதும் தூத்துக்குடியில் இருந்து தான், தூத்துக்குடியில் ஒரு நல்ல நிறுவனத்தை தேடி, அந்த நிறுவனத்துடன் ஒரு டை அப் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மாதத்திற்கோ வாரத்திற்கோ உங்களுக்கு எவ்வளவு உப்பு தேவைப்படுமோ அதை அவர்களிடம் சொல்லி சரியான நேரத்தில் உங்களுக்கு வந்து சேரும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இடையில் உப்பு தரகர்களை யாரும் அணுகாமல் நேரடியாக உப்பு நிறுவனத்திற்கே சென்று அவர்களிடமே விலையை பேசிக் கொள்வது நல்லது.


சரி, உப்பு தொழிலுக்கு வேறு ஏதும் ஆவணம் தேவைப்படுமா?

ஆம் நிச்சயம் தேவைப்படும், தரமான உப்பை தான், கொள்முதல் செய்து பேக்கிங் செய்கிறீர்கள் என்பதை உறுதிப் படுத்துவதற்காக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பிடம் உங்கள் நிறுவனத்தின் பெயரில் ஒரு ஆவணம் வாங்கி பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறீர்கள் என்றால் பொருளின் தர நிர்ணயச்சான்றிதழை இணைத்து ஏற்றுமதி சான்றிதழும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

சரி, உப்பு என்ன விலைக்கு கிடைக்கும், என்ன விலைக்கு விற்க முடியும்?

ஒரு டன் கல் உப்பு, அதாவது ஆயிரம் கிலோ கல் உப்பின் விலை ரூபாய் இரண்டாயிரத்திற்கு வாங்கலாம். ஒரு டன் தூள் உப்பு, அதாவது ஆயிரம் கிலோ தூள் உப்பில் விலை ருபாய் இரண்டாயிரத்து ஐநூறுக்கு வாங்கலாம், நீங்கள் பேசுவதை பொறுத்து, தொழிலை அவர்களிடம் நீட்டிச் செல்லும் பொருட்டு விலையை குறைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. நல்ல பிராண்டடு உப்புகள் மார்க்கெட்டில் 1 கிலோ 28 ரூபாய் வரை விற்பனையாகிறது. 1 கிலோ உப்பின் விலை அசலுக்கு 2 ரூபாய் விழுகிறது, பேக்கிங், கொள்முதல் செலவுகள் ஒரு கிலோவிற்கு 3 ரூபாய் என வைத்துக் கொண்டால், ஒரு கிலோ உப்பு 15 ரூபாய்க்கு விற்றால் கூட கிலோவிற்கு 10 ரூபாய் இலாபம் இருக்கிறது.


மாதத்திற்கு ஒரு 10 டன் ஏற்றுமதி செய்தால் கூட இலாபம் மட்டும் ஒரு இலட்சம் ரூபாய் அனைத்து செலவுகளும் போக உங்கள் கையில் நிற்கும்.

“ உப்பை பொருத்தவரை கடல் உப்பு என்பது தூத்துக்குடியில் மட்டுமே அதிகம் கிடைக்கின்ற அரிய வகை முத்து, அதை சரியாக கொள்முதல் செய்து மார்க்கெட்டிங் செய்பவர்கள் மாதத்திற்கு 100 டன் கூட ஏற்றுமதி செய்கிறார்கள், எல்லா தொழிலுக்கும் மிக மிக முக்கியம் மார்க்கெட்டிங், சரியாக மார்க்கெட்டிங் செய்யும் பட்சத்தில் உப்பிற்கு என்றுமே சரிவு வராது “