Electrical Shop Business Ideas Tamil - நல்ல இலாபம் தரும் வகையில் மின் உபகரணங்கள் விற்பனை செய்யும் மையம் ஒன்றை எப்படி வைப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Electrical Shop Business Ideas Tamil - மக்களின் தினசரி பயன்பாடாக இருக்கிறது மின் உபகரணங்கள், நாள் ஒன்றுக்கு மட்டுமே தேசம் முழுக்க பல்லாயிரம் கோடி அளவிற்கு மின் உபகரணங்கள் தினசரி வாங்கப்படுவதாக ஒரு தகவல், அந்த வகையில் அதை ஒரு தொழிலாக செய்தால் என்ன முதலீடு தேவைப்படும், எப்படி டீலர் ஷிப் எடுப்பது, என்ன இலாபம் இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
கடை எப்படி வைப்பது, முதலீடு எவ்வளவு தேவைப்படும்?
முதலில் கடை வைப்பதற்கான சரியான இடத்தை தெரிவு செய்ய வேண்டும், கடைக்கான ஆவணங்களை வைத்து மாநகராட்சி அல்லது பஞ்சாயத்துகளில் கடையை லைசென்ஸ் எடுத்துக் கொண்டு ஆவணப்படுத்திக் கொள்ள வேண்டும், மார்க்கெட்டில் இருக்கும் பிரபல எலக்ட்ரிக்கல் பிராண்டுகள் குறித்த முன்னெச்சரிக்கை முதலில் இருக்க வேண்டும், குந்தன், GM, லெக்ராண்ட், பைப்ஃரோஸ் உள்ளிட்ட பிரபல பிராண்டுகளின் ஏதாவது ஒன்றுடன் டீலர்ஷிப் வைத்துக் கொள்வது நல்லது.
சரக்குகள், பர்னிச்சர்கள், ரேக்குகள் எல்லாம் சேர்த்து ஒரு நல்ல விசாலமான கடை வைப்பதற்கு குறைந்த பட்சம் ஒரு 25 இலட்சம் முதல் 35 இலட்சம் வரை தேவைப்படும், மார்க்கெட்டில் அதிகமாக போகும் எலக்ட்ரிக்கல் பிராண்டுகளுடன் டீலர் ஷிப் எடுத்துக் கொண்டு, மீதி பொருள்களை எல்லாம் கம்பெனி மூலமாகவோ, சப்டீலர்ஸ் மூலமாகவோ கொள்முதல் செய்து கொள்ளலாம், சில்லறையாகவும் மொத்தமாகவும் விற்பனை செய்ய இருக்கிறீர்கள் என்றால் நேரடியாக கம்பெனி மூலம் கொள்முதல் செய்வதே நன்று.
சரி, இலாபம் எப்படி இருக்கும்?
எலக்ட்ரிக்கல் பொருள்களின் மீது குறைந்தபட்சம் 55 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் வரை இலாபம் இருக்கும், இது பொருள்களை பொறுத்து மாறலாம், சில பொருள்களுக்கு 45 சதவிகிதம் கிடைக்கும் சில பொருள்களுக்கு 100 சதவிகிதம் கூட கிடைக்கும், சராசரியாக 45 சதவிகிதம் என எடுத்துக்கொண்டால் கூட தினசரி சில்லறை கடைகளில் 10,000 வரை வணிகம் நடக்கும் பட்சத்தில் 4,500 வரை இலாபம் இருக்கும், மாதம் 1.30 இலட்சம் வரை இலாபம் இருக்கும், மொத்த கடைகளில் தினசரி 1,00,000 வரை வணிகம் நடக்கும் பட்சத்தில் 45,000 ரூபாய் முதல் 50,000 வரை இலாபம் இருக்கும், மாதத்திற்கு 12 முதல் 15 இலட்சங்கள் வரை இலாபம் இருக்கும். இதற்கு அதிகமாகவும் வணிகம் செய்ய முடியும் எல்லாம் உங்களது திறனை பொருத்தது.