• India
```

மாதம் ரூ 25000 வரை வருமானம்...நல்ல இலாபம் தரும் கீரை பயிரிடல்...!

Spinach Business Tamil

By Ramesh

Published on:  2024-12-10 14:40:23  |    886

Spinach Business Tamil - கீரை என்பது வருடம் முழுக்க பயிரிடும் வகையிலான ஒரு அசத்தலான பயிர் வகையாக பார்க்கப்படுகிறது, மழை காலத்தை தவிர மீதி எல்லா நாட்களும் நீங்கள் பயிரிடலாம், எத்தகைய சூழலிலும் கீரை வளரும் தன்மை உடையது, மற்ற பயிர்களை போல அதிக பராமரிப்பு தேவைப்படாது, தனி நிலமோ அல்லது மாடித் தோட்டமோ என எதில் வேண்டுமானாலும் பயிரிட முடியும்.

நல்ல தரமான கீரை விதைகளை முதலில் வாங்கி கொள்ள வேண்டும், அரைக்கிரை, பாலக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை உள்ளிட்டவைகள் எல்லாம் சந்தைகளில் நன்றாக போக கூடியவை, விதைத்த 3 ஆம் நாளிலேயே முளைத்து விடும் தன்மையுடையது, 20 முதல் 30 நாட்களுக்கு உள்ளாகவே அறுவடை செய்ய முடியும், கீரைக்கு இடையிடையே செண்டு செடிகளை நட்டால் கீரைகளை பூச்சிகள் அண்டாது. 



கீரையை பொறுத்தமட்டில் கிலோ கணக்கில் விற்பதை காட்டிலும் கட்டு கட்டாக போட்டு விற்பது நல்ல இலாபம் தரும், மொத்த விலைக்கு கிலோவில் கொடுத்து விட்டு, ரீட்டைல் கடைகளுக்கு கட்டு கட்டாக போடலாம், விற்பனைக்கும் கட்டு கட்டுகளாக விற்கலாம், ஒரு கீரை கட்டு ஆனது சந்தையில் ரூபாய் 10 முதல் 25 வரை விற்கப்படுகிறது, நகரங்களில் ஒரு கட்டு 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு ஒரு 100 முதல் 200 கட்டுகளை சந்தைப்படுத்துகிறீர்கள் என வைத்துக் கொண்டால் தினசரி ரூ 1000 முதல் ரூ 2000 வரை வருமானம் ஈட்ட முடியும், சராசரியாக மாதம் குறைந்த பட்சம் ஒரு 25,000 முதல் அதிகபட்சம் ஒரு 40,000 ரூபாய் வரை கீரை பயிரிடுதல் மூலம் சம்பாதிக்க முடியும், நீங்கள் பயிரிடும் அளவு, சந்தைப்படுத்தும் முறையை பொருத்து வருமானத்தை இன்னும் அதிகப்படுத்தலாம்.