Banana Leaf Business Plan - பொதுவாகவே பெரிய பெரிய ஹோட்டல்களில் இன்னமும் பரிமாறுவதற்கு வாழை இலை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது, அந்த வகையில் முன்பெல்லாம் வாழை இலையை அப்படியே அறுத்து ஒரு 5 பூட்டு இலையாக ஒரு 200 பூட்டு, 100 பூட்டுகள் வைத்து, 1000 இலை, 500 இலை என ஹோட்டல்களுக்கு இலை அறுப்பவர்கள் கொண்டு செல்வார்கள்.
அந்த இலையை வெட்டுவதற்கு என்று ஒரு ஆள் வைத்து இலையை டிபனுக்கு தனியாக, சாப்பாடுக்கு தனியாக, சட்னிக்கு தனியாக என்று பிரித்து அவர் வெட்டி வைப்பார், ஆனால் தற்போது நேரத்தையும், ஒரு ஊழியரையும் மிச்சப்படுத்த வெட்டிய வாழை இலையையே எதிர்பார்க்கின்றனர், அந்த வகையில் இது தற்போது ஒரு தொழிலாகவே மாறி இருக்கிறது.
சில இடங்களில் நேரடியாக வாழை பயிர்டுபவர்களே வெட்டி ஹோட்டல்களுக்கு சப்ளை செய்கிறார்கள், சில இடங்களில் மொத்த விலைக்கு இலையை ஏலம் எடுத்து அல்லது கொள்முதல் செய்து அதை வெட்டி ஹோட்டல்களுக்கு சப்ளை செய்கிறார்கள், பொதுவாக மொத்த விலையில் ஒரு 1000 இலை உள்ள ஒரு கல்யாண இலை கட்டு 4000 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.
பொதுவாக ஒரு கல்யாண இலையில் குறைந்த பட்சம் ஒரு நுனி இலை, இரண்டாக கிழிக்கப்பட்ட ஒரு நடு இலை, ஒரு வால் இலை கிடைக்கும், அதாவது ஒரு இலைக்கு நான்கு இலை கிடைக்கும், அப்படி என்றால் 1000 இலைக்கு, 4,000 வெட்டிய இல்லை கிடைக்கும், கழிவுகள் எல்லாம் போக ஒரு 3,500 வெட்டிய இலைகள் என வைத்துக் கொண்டால் கூட ஒரு இலைக்கு 2 ரூபாய் என வைத்துக் கொண்டால் ஒரு கட்டுக்கு ரூ 7000 வருமானம் பார்க்க முடியும்.
" அதாவது ஒரு 1000 இலையை ரூ 4000 க்கு வாங்கி வெட்டி ஹோட்டல்களுக்கு சப்ளை செய்தால் கூட ஒரே நாளில் ரூ 7,000 வருமானம் கிட்டும், அதில் இலாபம் மட்டும் தனியாக ரூ 3,000 நிற்கும் "