• India

6 வயதில் முதல் இணையதளம்...11 வயதில் சொந்த நிறுவனம்...உலகின் இளைய பெண் CEO பற்றி தெரியுமா உங்களுக்கு...?

World Youngest CEO

By Ramesh

Published on:  2024-11-18 17:19:41  |    345

World Youngest CEO - இந்தியாவின் தென் பகுதியில் கேரளா மாநிலத்தில் கோழிகோடு நகரைச் சார்ந்தவர் தான் ஸ்ரீ லெட்சுமி சுரேஷ், 1998 யில் பிறந்தவர், தனக்கு 3 வயது இருக்கும் போதே கம்ப்யூட்டரில் புகுந்து விளையாட ஆரம்பித்தார், இவரது அசாத்திய திறமைகள் பலரையும் வியக்க வைத்தன, ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர், சிறு வயதில் இருந்தே கம்ப்யூட்டர் மற்றும் வெப் டிசைனில் தீராத ஆர்வம் கொண்டு இருந்திருக்கிறார்.

அவருக்கு அப்போது (2004) 6 வயது இருக்கும், பள்ளியில் ஒரு பிராஜக்டுகளை செய்து வர சொல்லி இருக்கிறார்கள், ஸ்ரீ லெட்சுமியின் பெற்றோர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் எப்போதும் போல வீடு செய்து கொடுக்கலாம், இல்லையேல் கடைகளில் வாங்கி எதையாவது கொடுக்கலாம் என முடிவு செய்து இருக்கின்றனர், ஆனால் ஸ்ரீ லெட்சுமிக்கோ வேறு ஒரு ஐடியா இருந்து இருக்கிறது.



அது தான் இணையதளம், அதாவது அவருடைய 6 வயதிலேயே ஒரு இணையதளத்தை ப்ராஜக்டாக செய்ய வேண்டும் என்று அவருடைய மூளை அவருக்கு கூறி இருக்கிறது, அவரே ஒரு இணையதளத்தை உருவாக்கி அதில் அவருடைய குடும்ப படங்களை எல்லாம் பகிர்ந்து இருக்கிறார், அது பள்ளியில் மட்டும் வைரல் ஆகாமல் பிரபல தொலைக்காட்சி செய்திகளிலும் வைரலானது.

அதற்கு பின்னர் 11 வயதில் eDesign என்ற பெயரில் ஒரு வெப்சைட் டிசைன் கம்பெனியையும் துவங்கினார், உலகின் முதல் இளைய பெண் CEO வாக இந்தியாவே அவரை அப்போது போற்றியது, அக்காலக்கட்டத்தில் இவர் ஆட்கொண்ட கிளையண்டுகள் எல்லாமே மைக்ரோசாப்ட், நோகியா, கோக் போன்ற மல்டி நேஷனல் கம்பெனிகள் தான், தோனி மாறி அடிச்சா சிக்ஸர் தான் என்ற பாணியை கொண்டவர் ஸ்ரீ லெட்சுமி.

" தற்போதும் கேரளாவின் அரசு சார்ந்த பல அலுவல் இணையதளங்கள் இவரது நிறுவனத்தின் மூலம் தான் இயங்கி வருகின்றன, தொடர்ந்து இன்னும் பல மல்டி நேஷனல் பிராஜக்டுகளை கையில் எடுக்கவும் முயற்சித்து வருகிறார் "