Dindugal Lock History In Tamil - 18 ஆம் நூற்றாண்டில் திண்டுக்கல் பகுதியை ஆண்டு வந்த திப்பு சுல்தான் ஆட்சிக் காலத்தில் அவரது கோட்டை மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்களை பாதுகாப்பதற்காக முதன் முதலில் திண்டுக்கல்லில் பூட்டு வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது, ஆனால் அந்த காலத்தில் எல்லாம் பூட்டுகள் தயாரிப்பு திண்டுக்கல்லில் பெரிதாக நடை பெறவில்லை.
1935 காலக்கட்டம் ஒரு இரும்பு ஆச்சாரி ஒருவர், வித்தியாசமான வடிவத்தில் ஒரு பூட்டை வடிவமைத்துக் கொண்டு இருந்தார் அந்த சமயத்தில், அவரது கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் பூட்டு நன்றாக இருக்கிறதே, நானே வாங்கிக் கொள்கிறேன் என்று அந்த பூட்டை அவரே நல்ல விலை கொடுத்து எடுத்து சென்றாராம், அதற்கு பின் அவரே ஒரு 3 பேரை கூட்டி வந்து பூட்டு வாங்க வைத்தாராம்.
அன்று ஆரம்பித்த அவருடையை அந்த சிறு வியாபாரம் தான் நாளடைவில் நாடு முழுக்க வந்து வாங்கி செல்லும் ஒரு பெரு வியாபாரமாக உருவெடுத்தது, தனியாக செய்ய முடிய இயலாததால் பூட்டு தயாரிப்பவர் பலருக்கும் பூட்டு தயாரிக்க கற்றுக் கொடுத்து தன்னிடம் வேலைக்கு அமர்த்தினார், மிகப்பெரிய அளவில் நடைபெற்ற பூட்டு வியாபாரம், நாளடைவில் திண்டுக்கல் முழுக்க பரவியது.
பலரும் அவரிடம் இருந்து பிரிந்து தனியாக தொழிலை துவங்கினர், பெரும்பாலும் திண்டுக்கல் பூட்டு கைகளில் தயாரிக்கப்படுகிறது, மெசினரி பூட்டுகள், டிஜிட்டல் பூட்டுகள் வந்தாலும் கூட கைகளால் செய்யப்படும் பூட்டுகளுக்கு இன்னும் மவுசு இருக்க தான் செய்கிறது, திருப்பதி முதல் திருச்செந்தூர் வரை இருக்கும் அனைத்து கோவில்களிலும் திண்டுக்கல் பூட்டு தான்.
" எத்துனை மெசினரி பூட்டுகள் வந்தாலும், எத்துனை டிஜிட்டல் சிஸ்டங்கள் வந்தாலும் கூட புவிசார் குறியீடு பெற்று இருக்கும் திண்டுக்கல் பூட்டுக்கு உள்ள மவுசு என்னிக்கும் குறைய வாய்ப்பில்லை "