• India

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா?

Mukesh Ambani Per Day Earnings

By Ramesh

Published on:  2024-11-06 20:56:22  |    326

Mukesh Ambani Per Day Earnings - இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக அறியப்படும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை மற்றும் அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக அறியப்படுகிறார் முகேஷ் அம்பானி, அவரை கேட்காமல் ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஒரு அணுவும் அசையாது அந்த அளவிற்கு நிறுவனத்தின் ஒட்டு மொத்த ராஜாங்கமும் முகேஷ் அம்பானி என்ற ஒற்றை தலைமையின் பிடியில் இருக்கிறது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனைத்து முடிவுகளும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனைத்து துறை சார்ந்த நடவடிக்கைகளும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளும் முழுக்க முழுக்க முகேஷ் அம்பானியின் கைக்குள் தான் அடங்கி இருக்கிறது, அவரைக் கேட்காமக் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கீழ் இருக்கும் எந்த துறையும் செயல்படுவது இல்லை.



சரி, இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனத்தை தனக்குள் வைத்து இருக்கும் முகேஷ் அம்பானியின் ஒரு நாள் சம்பளம் என்பது, இந்தியாவில் அதிகபட்ச சம்பளம் வாங்கு ஒரு ஐடி ஊழியரின் வாழ்நாள் சம்பளத்தை விட கிட்ட தட்ட 80 மடங்கு அதிகம், அதாவது முகேஷ் அம்பானி நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 300 கோடி சம்பாதிக்கிறார், சராசரியாக அவரின் ஒரு நாள் வருமானம் 167 கோடியாக இருக்கிறது.

ஒரு வினாடிக்கு முகேஷ் அம்பானியின் சராசரி வருமானம் 51,590 ரூபாயாக இருக்கிறது, ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் சம்பளத்தை விட முகேஷ் அம்பானியின் ஒரு வினாடி சம்பளம் அதிகம், நாம் ஒவ்வொரு முறை கண் இமைக்கும் போது முகேஷ் அம்பானியின் கணக்கில் 1,50,000 ரூபாய் அக்கவுண்ட்டில் ஏறுகிறதாம், அதாவது ஒவ்வொரு விநாடியையும் பணமாக மாற்றிக் கொண்டே இருப்பது தான் முகேஷ் அம்பானியின் சாம்ராஜ்ஜியம்.