Zomato Launches New 'District' App - ஹரியானாவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல உணவு டெலிவரி நிறுவனம் ஆன சொமட்டோ, கடந்த 2008 முதல் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது, இது ஒரு உணவு ஒருங்கிணைப்பு மற்றும் உணவு விநியோக நிறுவனம் ஆக அறியப்படுகிறது, திறம்பட செயல்பட்டு வரும் சொமட்டோ நிறுவனம் கடந்த ஆண்டை விட இந்த நிகழ் ஆண்டில் தங்கள் வருமானத்தை கிட்டதட்ட 72% உயர்த்தி இருக்கிறது.
கடந்த நிதி ஆண்டில் சொமட்டோவின் வருமானம் ரூ 7,079 கோடியாக இருந்த நிலையில், இந்த நிகழ் ஆண்டில் சொமட்டோவின் வருமானம் ரூ 12,114 கோடியாக உயர்ந்து இருக்கிறது, கடந்த ஆண்டில் ரூ 971 கோடி இழப்பை சந்தித்த சொமட்டோ நிறுவனம் இந்த நிகழ் ஆண்டில் ரூ 561 கோடி அளவில் இலாபம் ஈட்டி இருக்கிறது, சொமட்டோவின் புதிய விளம்பர யுக்திகள் அதன் வருமானத்திற்கு வெகுவாக கை கொடுத்து இருக்கின்றன.
இந்த நிலையில் தான் சொமட்டோ உணவு டெலிவரி மட்டும் அல்லாது வேறு துறைகளிலும் தங்களது கரத்தை விரிவு படுத்த நினைத்தது. அதற்கு ஏற்றார்போல பேடிஎம் நிறுவனமும் தனது பொழுது போக்கு அம்சங்களை விற்க துணிந்ததால், சொமட்டோ நிறுவனமும் அந்த டீலை ரூ 2,048.40 கோடிக்கு முடித்தது, முடித்த கையோடு DISTRICT என்ற செயலியையும் சொமட்டோ துவங்கி இருக்கிறது.
இந்த செயலியின் மூலம் வாடிக்கையாளர்கள் மூவி டிக்கெட்டுகள், பிரபல ஹோட்டல்களின் டைனிங்குகள், பிரபலங்களின் நேரலை நிகழ்ச்சிகள், பிரபல இசை நிகழ்ச்சிகள், கிரிக்கெட் மைதான இருக்கை புக்கிங் உள்ளிட்டவைகள் தற்போதைக்கு இந்த செயலியில் பண்ண முடியும், செயலிக்கு வரும் வரவேற்பை பொறுத்து மேலும் பல சேவைகள் இதனுடன் இணையும் என கூறப்பட்டு இருக்கிறது.