TATA Emerged As India's Leading International Carrier - கிட்டதட்ட 10 வருடமாக இந்தியாவில் இயங்கி வந்த விஸ்தாரா நிறுவனம், டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு இருக்கிறது, இந்த இணைவின் மூலம் இனி ஏர் இந்தியா ஒரு வாரத்திற்கு 210 விமானங்கள், 90 வழித்தடங்களை இணைக்கும் வகையில் 5,600 பயணங்கள் நிகழ இருக்கிறது, நவம்பர் 11, 2024 அன்று விஸ்தாரா - ஏர் இந்தியா நிறுவனத்தின் முழுமையான இணைப்பு முடிந்து இருக்கிறது.
டாடா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இரண்டும் இணைந்து விஸ்தாரா நிறுவனத்தை கையப்படுத்தி இருப்பதன் மூலம், இனி தினமும் 1,20,000 பயணிகளை ஏர் இந்தியா கையாள வேண்டி இருக்கிறது, அவர்களை உள்நாடு மற்றும் சர்வதேசம் சேர்ந்து 90 இடங்களில் கொண்டு சேர்க்க இருக்கிறது, இந்த இணைப்பு மூலம் வரும் காலங்களில் நிறைந்த சேவையை குறைந்த கட்டணத்தில் பயனர்கள் பெற முடியும் என டாடா அறிவித்து இருக்கிறது.
இந்த இணைப்பின் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விரிவாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தில் கூடுதலாக 3,194.5 கோடி ரூபாயை முதலீடு செய்யும், விஸ்தாரா நிறுவனத்தில் பணி புரிந்த அனுபவம் மிக்க பல தலைமைகளும் ஏர் இந்தியாவில் இணைந்து இருப்பதால், ஏர் இந்தியா சமீப காலமாக சந்தித்து வரும் இக்கட்டான சூழலுக்கு அவர்கள் மூலம் விடை கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது.
இந்த முக்கோண இணைப்புகளால் இந்தியாவின் விமான சேவையின் தரம் சர்வதேச அளவில் உயர வாய்ப்புகள் இருக்கிறது, தனி தனி செயல்பாடுகள் ஒன்றிணைக்கப்பட்டு இருப்பதால் சேவையை கையாள்வதில் இனி டாடா நிறுவனத்திற்கு சிரமம் இருக்காது, இந்த இணைவு பயனர்களுக்கு ஒரு தரமான விமான சேவையை குறைந்த கட்டணத்தில் வழங்குவதை எதிர்கால நோக்கமாக கொண்டு இருப்பதாக தகவல்.