• India

ரத்தன் டாடா அவரது வாழ்வில் மிகவும் உடைந்த தருணங்கள் எது தெரியுமா...?

Emotional Moments Of Ratan Naval Tata - ரத்தன் டாடாவின் வாழ்க்கை பக்கங்களில் அவர் மிகவும் உடைந்த தருணங்கள் பற்றி அவரே எழுதி இருக்கிறார், அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Emotional Moments Of Ratan Naval Tata

Emotional Moments Of Ratan Naval Tata - டாடா குழுமத்தின் ஆகப்பெரும் தலைமைகளுள் ஒருவரான ரத்தன் டாடா சமீபத்தில் உடல்நலக்குறைவால் மறைந்து இருந்தார், அவரது இடத்தை நிரப்ப தற்போது நோயல் டாடாவும் டாடா குழுமத்திற்குள் வந்து விட்டார், ஆனாலும் காலங்கள் ஓடினாலும் யுகங்கள் ஓடினாலும் அந்த ரத்தன் டாடா என்ற மனிதன் இருந்த அந்த இடத்தை யாராலும் நிரப்பி விட முடியாது என்பது தான் இந்த யுகத்தின் ஆகப்பெரும் உண்மை.


எவ்வளவு பெரிய தலைமையாக இருந்தாலும் அவர்களுக்கு உள்ளும் ஏதாவது ஒரு கருப்பு பக்கம் இருக்கும், ரத்தன் டாடாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல, அவரது வாழ்க்கையில் அவ்வப்போது அந்த பக்கங்கள் வந்து சென்று தான் இருந்திருக்கின்றன. அவருக்கு அப்போது பள்ளிப்பருவம், அவரின் பெற்றோர்கள் திடீர் என்று பிரிகிறார்கள், ரத்தன் உடைகிறார், தாயின் அரவணைப்பில், தந்தையின் ஆற்றுதலில் வளர வேண்டிய ரத்தன் டாடா தனித்து விடப்படுகிறார்.

அடுத்து ஒரு சில நாட்களிலேயே அவரது அம்மா வேரு ஒரு திருமணம் செய்து கொள்கிறார், எந்த ஒரு அன்பும் இல்லாமல், ஏக்கத்தோடு அழுகை நிறைந்த அவரின் கண்களை அப்போது துடைக்க அவரின் பாட்டியார் மட்டுமே அவருடன் இருந்தார், தொடர்ந்து அவரது பள்ளிப் பருவங்களில் ராக்கிங், அவரது பெற்றோர் குறித்த ஏளனங்கள் மட்டுமே நிறைந்து இருந்திருக்கின்றன, அதனால் தான் ஏனோ அவருக்கு பெரிதாக பள்ளிப் பருவ நண்பர்கள் யாரும் இல்லை.


சரி, படித்து முடித்து விட்டு டாடாவிலே பணி, அப்படியே ஒரு தென்றல் போல ஒரு காதல், இந்தியாவில் இருந்து சீனாவிற்கு பறந்து சென்றது டாடா விட்ட காதல் அம்பு, எல்லாமே சரியாக சென்ற நேரம், டாடாவின் பொற்கால நேரங்கள் என்று கூட அதை சொல்லலாம், கிட்ட தட்ட திருமணமே கை கூடும் நிலை வந்தது, அந்த சமயத்தில் தான் ஒரு இடி, இந்தோ சீனா வார், அத்தோடு அப்பெண்ணின் பெற்றோரும் டாடாவை கைவிடவே அந்த பெண் டாடாவிடம் இருந்து விலகி ஒரிரு மாதங்களிலேயே வேறு ஒரு திருமணம் செய்து விட்டார், 

ஆனால் டாடாவோ அந்த பெண்ணின் நினைவுகளோடும், வாழ்வின் வலிகளோடும் வாழ பழகி விட்டார்,  கடைசி வரை திருமண வாழ்க்கைக்குள் செல்ல அவர் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை, என்ன தான் பிசினஸ் வாழ்க்கையில் டாடா மிகப்பெரிய ஜாம்பவனாக இருந்தாலும் கூட, நிஜ வாழ்க்கையில் அவருடன் இருந்தது அதீத தனிமை மட்டும் தான், அது தான் அவரின் விருப்பமாகவும் இருந்து இருக்கிறது. 

You can share this post!