Why Indian's Depositing Money In Swiss Account - பொதுவாக இந்தியர்கள் ஸ்விஸ் வங்கியில் கணக்கை துவங்கியதற்கு ஒரு மிகப்பெரிய வரலாறே உண்டு, அதாவது இந்திரா காந்தி அவர்கள் இந்தியாவின் பிரதமராக செயல்பட்ட போது, கார்பரேட் மீதான நேரடி வரி என்பது 1970 காலக்கட்டத்தில் கிட்டதட்ட 93% வரையில் விதிக்கப்பட்டது, 1973 காலக்கட்டங்களில் எல்லாம் அந்த நேரடி வரி என்பது 97.5% என்ற உச்சத்தை தொட்டது,
இந்த காலக்கட்டங்களில் தான் ஒரு சில தொழில் அதிபர்கள் தங்களது பணத்தை அரசுக்கு தெரியாமல் சேமிக்க ஸ்விஸ் வங்கி கணக்கை பயன்படுத்தினர், ஸ்விஸ் வங்கி சேமிப்பாளர்களின் உத்தரவு இல்லாமல் யார் கேட்டாலும் எந்த ஒரு சேமிப்பாளர்களின் தரவையும் தராது என்பதால் அது தொழில் அதிபர்களுக்கும் வாய்ப்பாக அமைந்ததால், பலரும் தொடர்ந்து முதலீடு செய்ய ஆரம்பித்தனர்,
தற்போது கார்பரேட் வரி குறைந்தாலும் கூட இன்றளவும் பல தொழில் அதிபர்கள் ஸ்விஸ் வங்கி கணக்கை விடுவதாக இல்லை, தற்போது இருக்கும் ஒரு அதிர்ச்சிகர தகவல் என்ன என்றால் தொழிலதிபர்களில் ஒரு 5% பேர் மட்டுமே அரசுக்கு 97% வரியை செலுத்தி வருகிறார்கள், மீதி அனைவருமே சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை வைத்து வரி ஏய்ப்பு செய்து அதை ஸ்விஸ் வங்கியில் சேமித்து வருகின்றனர்,
ஸ்விஸ் வங்கிகள் எந்த ஒரு பொருளாதார சரிவிற்கும் உட்படாது என்ற உத்தரவாதம் இருப்பதாலும், சில தொழிலதிபர்கள் அங்கு முதலீடு செய்து வருகின்றனர், என்ன தான் ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்து இருக்கும் இந்தியர்களின் பட்டியலை ஸ்விஸ் வங்கி வெளியிட்டாலும் கூட, அரசு அதை மீட்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது, கருப்பு பணம் கருப்பு பணமாகவே தான் இருக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.