• India

காப்பீட்டு துறையிலும் கால்பதிக்கும் ஜியோ...என்ன எதிர்பார்க்கலாம்...?

Jio And Allianz Made Partnership To Set A New Insurance Sector - பிரபல ஜியோ நிறுவனம் தனது அடுத்தக்கட்ட விரிவாக்கமாக காப்பீட்டு துறையில் கால் பதிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Jio And Allianz Made Partnership To Set A New Insurance Sector

Jio And Allianz Made Partnership To Set A New Insurance Sector - கிட்டதட்ட 110 பில்லியன் டாலர் சொத்துக்கு அதிபதியான முகேஷ் அம்பானியின், ஜியோ நிறுவனம் கிட்டதட்ட இரண்டு லட்சம் கோடி சொத்து மதிப்பை கொண்டு இருக்கிறது, தொடர்ந்து பல்வேறு துறையில் கால் பதித்து வரும் ஜியோ நிறுவனம் தங்களது அடுத்த கட்ட நடவடிக்கையாக காப்பீட்டு துறையில் கால் பதிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தில் இருந்து வெளியேறி இருக்கும் அலையன்ஸ் நிறுவனமும், ஜியோ பைனான்ஸ் நிறுவனமும் கைகோர்த்து புதிய ஜியோ காப்பீடு நிறுவனத்தை தோற்றுவிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது, பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம், பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் கீழ் பொது காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.


ஏன் திடீர் என்று காப்பீடு நிறுவனத்தில் ஜியோ?

அலையன்ஸ் நிறுவனமும், ஜியோ நிறுவனமும் சமீபத்தில் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது, ஜியோ நிறுவனத்தின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு நடைபெற்ற இந்த கூட்டத்தில் தான் ஜியோவும், பஜாஜ் அலையன்ஸ்சும் இணைந்து காப்பீடு நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க திட்டம் தோற்றுவிக்கப்பட்டதாம், இதனால் பஜாஜ் அலையன்ஸ்சில் ஏற்கனவே காப்பீடு செலுத்தி வருபவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.

சரி, ஜியோ காப்பீட்டில் என்ன எதிர்பார்க்கலாம்?

ஜியோ என்றாலே மக்கள் அதனிடம் அட்டகாசமான ஆபர்களை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர், அந்த வகையில் ஜியோ காப்பீடு நிறுவனமும், காப்பீட்டு துறையும் ஏதாவது புரட்சிகரமாக செய்யும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை, நாட்டிலேயே மிக மிக குறைந்த காப்பீட்டு தொகையை அறிமுகப்படுத்தி எளிய மக்களையும் ஜியோ காப்பீட்டை நோக்கி ஈர்ப்பது தான் ஜியோ காப்பீட்டு நிறுவனத்தின் முதல் திட்டமாம்.

You can share this post!