டாடா குழுமத்தின் மிகப்பெரிய சக்தியாக அறியப்படும் ரத்தன் டாடா மறைவை அடுத்து, டாடா நிறுவனத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டு இருக்கிறது, கிட்டதட்ட 165 பில்லியன் டாலர் மதிப்புள்ள டாடாவின் பெரும்பாலான பங்குகளை கொண்டு இருக்கும் இரண்டு அறக்கட்டளைகள் தற்போது தலைமையின்று இருப்பதாம் டாடா நிறுவனத்தின் பல பங்குகள் தற்போது முடங்கி கிடக்கின்றன.
தற்போதைக்கு இந்த இரண்டு அறக்கட்டளைகளுக்கும் ஒரு இடைக்கால நிறுவனர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, வரலாற்று ரீதியாக பார்க்கும் போது டாடா நிறுவனத்தின் நிறுவனர்கள் பெரும்பாலும் டாடா குழுமம், பார்சி இனம் என இரண்டிலும் தொடர்புடையவராக தான் இருந்து இருக்கிறார்கள், இதனால் டாடா குழுமத்தில் இருந்து ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
டிவிஎஸ்
நிறுவனத்தைச் சார்ந்த தொழில் அதிபர் வேணு ஸ்ரீனிவாசன், முன்னாள் பாதுகாப்பு செயலர் விஜய் சிங் ஆகியோர் டாடா அறக்கட்டளையில் 2018 முதலே குறிப்பிட்ட சில பொறுப்பில் இருந்து வருவதால் அவர்கள் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது, ஆனாலும் அவர்களுக்கான வாய்ப்பு என்பது குறைவு என்று தான் சொல்லப்படுகிறது, இன்னொன்று ரத்தன் டாடாவின் ஒன்று விட்ட சகோதரராக அறியப்படும் நோயல் டாடாவும் இந்த பொறுப்பிற்கு முன்னனி வேட்பாளராக அறியப்படுகிறார்.
நோயல் டாடா ஏற்கனவே சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை என இட்ரண்டிலும் குறிப்பிடத்தக்க பொறுப்பில் இருப்பதாலும், அவர் டாடா குழுமத்தின் வாரிசு என்பதாலும் அவரே அதிகம் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அறக்கட்டளைகளில் ஏனைய சில நிர்வாகிகள் இணைந்து எடுக்கும் முடிவாகவே இது இருக்கும். இந்த பொறுப்பு டாடாவின் எதிர்காலத்தை பொறுத்தது என்பதாம் தீர முடிவெடித்தே முடிவு சொல்லப்படும் என டாடா குழுமம் அறிவித்து இருக்கிறது.