Adani Over All Revenue VS Debt - தற்போதைய சூழலில் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடத்தை போட்டி போட்டுக் கொண்டு பிடித்து இருப்பது முகேஷ் அம்பானியும், கவுதம் அதானியும் தான், இருவரும் ஒவ்வொரு மாதமும் மாற்றி மாற்றி முதல் இரண்டு இடத்தை தக்க வைத்துக் கொள்கின்றனர், தற்போதைய நிலையில் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 116 பில்லியன் டாலராக இருப்பதாக தகவல்.
இந்திய ரூபாய் மதிப்பில் அதானியின் நிகர சொத்து மதிப்பு 10 இலட்சம் கோடி ரூபாயை தாண்டும் என கூறப்படுகிறது, அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு கடந்த 6 வருடத்தில் மட்டும் சராசரியாக 80 சதவிகிதத்திற்கும் மேல் உயர்ந்து இருக்கிறதாம், ப்ளூம்பர்க் வெளியிட்ட உலகளாவிய பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி 18 ஆவது இடத்தில் இருப்பதாக தகவல்.
இந்த நிகழ் ஆண்டைப் பொறுத்தவரையில் கவுதம் அதானியின் இயக்க இலாபம் மட்டும் 82,917 கோடி ரூபாய் ஆக இருக்கிறது, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கவுதம் அதானியின் இயக்க இலாபம் இந்த நிகழ் ஆண்டில் 45% அதிகரித்து இருக்கிறது, கடனைப் பொறுத்தவரையில் கடந்த நிதி ஆண்டில் (FY23) கவுதம் அதானியின் மொத்த கடன் மதிப்பு 2.27 இலட்சம் கோடியாக இருந்தது.
இந்த நிதி ஆண்டில் (FY24) கவுதம் அதானியின் மொத்த கடன் மதிப்பு 2.42 இலட்சம் கோடியாக இருக்கிறது, இந்த கடன் அவர்களது தற்போதைய இயக்க இலாபத்தை விட 2.92% அதிகம், அதே சமயத்தில் அவர்களது கடனை விட அவர்களது நிகர சொத்து மதிப்பு 4.5 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது, அதானி அவரது கடனை அடைக்க வேண்டுமானால் அவரது சொத்தில் 5 இல் ஒரு பங்கை விடுத்தால் அடைத்து விடலாமாம்.