சர்க்கரை உற்பத்தி:

சர்க்கரை உற்பத்தி செய்வதில் முன்னிலையில் உள்ள கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலத்தில் இம்முறை நல்ல மழை பெய்ததன் காரணமாக கரும்பு உற்பத்தியானது சிறப்பாக உள்ளது. நடப்பு சர்க்கரைப் பருவத்தில் 2019 ஆண்டின் அக்டோபர் மாதம் முதல் 2020 ஆண்டு செப்டம்பர் மாத காலகட்டத்தில் இந்தியாவில் சர்க்கரை உற்பத்தியின் அளவானது 14.1 லட்சம் டன் ஆக இருந்துள்ளது.

மேலும், சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் சர்க்கரை உற்பத்தியானது 4.84 லட்சம் டன் ஆக இருந்தது. குறிப்பாக, சென்ற ஆண்டில் இக்காலகட்டத்தில் மொத்தம் 127 சர்க்கரை ஆலைகளில் கரும்பு நசுக்கும் பணி ஆனது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், நடப்பு ஆண்டில் 274 ஆலைகளில் கரும்பு நசுக்கும் பணி ஆனது செய்யப்பட்டது.

குறிப்பாக, உத்திரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 127 சர்க்கரை ஆலைகள் சேர்ந்து 3.85 லட்சம் டன் அளவிளான சர்க்கரை ஆனது உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் இந்த மாநிலத்தில் 78 ஆலைகள் சேர்ந்து 2.93 லட்சம் டன் சர்க்கரை ஆனது உற்பத்தி செய்தது.

கர்நாடகா, மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டின் வறட்சி காரணமாக கரும்பு உற்பத்தி மற்றும் சர்க்கரை உற்பத்தி மிகவும் மந்தமாக காணப்பட்டது. மேலும், மகாராஷ்டிராவில் 117 சர்க்கரை ஆலைகளில் இந்த ஆண்டு சர்க்கரை உற்பத்தியை செய்தன. அதேபோல், கர்நாடகத்தில் 49 சர்க்கரை ஆலைகளில் 3.4 லட்சம் சர்க்கரை ஆனது உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் கர்நாடகத்தில் 34 ஆலைகளில் 1.43 லட்சம் டன் சர்க்கரை ஆனது உற்பத்தி செய்யப்படிருந்தன. குஜராத்தில் கடந்த நவம்பர் 14-ம் தேதி வரை 14 சர்க்கரை ஆலைகளில் கரும்பு நசுக்கும் பணி செய்யப்பட்டன. மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரையில், தமிழகம் உட்பட 18 மாநிலங்களில் ஆலைகளில் உற்பத்திப் பணி ஆனது செய்யப்பட்டிருக்கின்றன.

Author – Gurusanjeev Sivakumar