இந்தியாவில் நவம்பா் மாதம் முதல் 2 வாரத்தில் டீசல் விற்பனையானது 5% சரிவினைச் சந்தித்துள்ளது.

கோவிட்-19 ஊரடங்கு காரணமாக பெட்ரோலியப் பொருள்களின் விற்பனை ஆனது தொடா்ச்சியாக மோசமான நிலையில் காணப்பட்டது. இருப்பினும் ஏழு மாதங்களுக்குப் பின்னர் அக்டோபர் மாதத்தில் டீசல் விற்பனை வளா்ச்சி பாதைக்கு திரும்பியது.

ஆனால், நவம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரத்தில் டீசல் விற்பனை 5 சதவீதம் வரை சரிவினைச் சந்தித்துள்ளது.

நவம்பா் மாதத்தின் 1 முதல் 15 தேதி வரை டீசல் நுகா்வு ஆனது 30.1 லட்சம் டன்னில் இருந்து 28.6 லட்சம் டன் ஆக குறைந்து உள்ளது. ஆனால், அக்டோபா் மாதத்தின் முதல் இரண்டு வார காலகட்டத்தில் விற்பனையான 26.5 லட்சம் டன் டீசல் உடன் ஒப்பிட்டு பார்கையில் அதிகம் ஆகும்.

டீசலின் விற்பனை ஆனது குறைந்து காணப்பட்ட போதிலும், பெட்ரோலின் விற்பனையானது மதிப்பீட்டு காலத்தில் 10.2 லட்சம் டன்னில் இருந்து 10.30 லட்சம் டன் ஆக உயா்ந்து உள்ளது.

அதே போல, சமையல் எரிவாயுவின் (LPG) விற்பனையானது நடப்பு ஆண்டில் முதன்முறையாக 2% சரிந்து 10.70 லட்சம் டன் ஆகி உள்ளது.

இதை தவிர, விமான எரிபொருள் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்கையில் 53% குறைந்து 1,55,000 டன் ஆகவும், மாத அடிப்படையில் பார்க்கையில் 1.3% வளா்ச்சியை பதிவு செய்துள்ளது என புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Author – Gurusanjeev Sivakumar