ஜியோ மார்ட்

இந்திய E-COMMERCE துறையில் கடும் போட்டி நிலவி வரும் இத்தகைய சூழலில் அதிக அளவிலான வாடிக்கையாளரைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தீபாவளி பண்டிகையினை குறிவைத்து மிகப்பெரிய தள்ளுபடிகளை முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய பண்டிகையாய் கூறப்படும் தீபாவளி பண்டிகையை முன்வைத்து முகேஷ் அம்பானியினுடைய ரீடைல் வர்த்தகப் பிரிவான ஜியோமார்ட், ரிலையன்ஸ் ரீடைல், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகியவையில் அதிகப்படியான தள்ளுபடிகள் ஆனது அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக ஜியோ மார்ட்டின் வருகையின் காரணாமாக மோசமான வர்த்தகத்திற்கு தள்ளப்பட்டுள்ள அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களுக்கு இந்த நிலையானது மிகவும் பின்னடைவாக கருதப்படுகிறது.

E-COMMERCE தளத்தில் முன்பு இல்லாத அளவிற்குப் போட்டிகள் அதிகரித்துள்ள இந்நிலையில் தற்போது ஜியோமார்ட் தளத்தில் அரிசி, பிரியாணி மசாலாக்கள், இனிப்புகள் ஆகியவற்றிற்கு முன்பு இல்லாத அளவிற்கு தற்போது 50% தள்ளுபடி ஆனது ஜியோமார்ட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த பொருட்களுக்கு ரிலையன்ஸின் டிஜிட்டல் தளத்தில் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் முன்பு எந்த ஒரு E-COMMERCE தளங்களும் வழங்காத மிக குறைந்த விலை தள்ளுபடி விற்பனை செய்யவுள்ளதாக ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு 10000-க்கும் மேற்பட்ட கடைகள் இருப்பதன் காரணமாக ஜியோமார்ட் தங்களின் சேவைகளை மிகவும் குறைந்த காலத்தில் நாட்டின் 200 நகரங்களில் மிக எளிய முறையில் விரிவாக்கம் செய்துள்ளது.

மேலும், ரிலையன்ஸ் நிறுவனம் இத்தகைய காலகட்டத்தில் டிஜிட்டல் விளம்பரத்தின் மீதுள்ள முதலீட்டினை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

ஜியோமார்ட்டின் வருகை மற்றும் இந்த அதிரடி விரிவாக்கம் ஆனது முன்னதாக பிளிப்கார்ட் அமேசான் மற்றும் நிறுவனங்களை கடுமையான பாதிப்புக்கு காரணமாக உள்ள நிலையில், தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடிகளை ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக முன்னணி E-COMMERCE நிறுவனங்களுக்கு வர்த்தகம் ஆனது மிகபெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Author – Gurusanjeev Sivakumar