இந்தியாவில் சமையல் எண்ணெயின் விலையானது எப்போதும் இல்லாத அளவுக்கு நடப்பு ஆண்டில் கிட்டதட்ட 30% உயர்ந்துள்ளது.

சில வாரத்திற்கு முன்னதாக இந்திய மக்களுடைய அடிப்படை உணவுப் பொருளான வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கினுடைய விலையானது 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட் சமயத்தில் நாடு முழுவதும் உள்ள] மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். இந்நிலை முழுமையாக மாறுவதற்கு முன்னதாக சாமானிய மக்களைப் பாதிக்கும் விதமான அடுத்தகட்ட பிரச்சனையானது வந்துள்ளது.

சமையல் எண்ணெயின் விலையில் ஏற்பட்டு உள்ள உயர்வு குறித்தும், அதைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆலோசனை செய்துள்ளது. இதன் காரணமாக அடுத்தச் சில வாரங்களில் சமையல் எண்ணெயின் விலையானது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 6 மாதங்களாக மலேசியாவில் பாமாயிலின் விலையானது அதிகளவில் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஆசிய சந்தையில் அதன் விநியோகம் குறைவடைந்து இதன் விலை அதிகரித்து உள்ளது. இதன் எதிரொலியாகவே இந்தியாவில் சமையல் எண்ணெயின் விலையானது அதிகரித்துள்ளது.

சமையல் எண்ணெயின் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை செய்கின்ற நிலையில் சமையல் எண்ணெயின் இறக்குமதி வரியானது குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Author – Gurusanjeev Sivakumar