மியூச்சுவல் ஃபண்ட் துறையில் சிஸ்டமெடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் எனப்படும், SIP-யில் ஜனவரி 2022 மாதத்திற்கான மாதாந்திர பங்களிப்புகள் உச்சத்தை தொட்டு சாதனை அடைந்துள்ளன. பங்கு சந்தை ஏற்ற இறக்கங்களில் இருப்பானதால் SIP வழி முதலீட்டின் பயன் மற்றும் தேவையை முதலீட்டாளர்கள் கருத்தில் கொள்ள ஆரம்பித்துள்ளனர் என்றே இந்த வளர்ச்சி நமக்கு தெரிவிக்கிறது. SIP முறை மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் சீரான முதலீட்டை மேற்கொள்ள வழி செய்கிறது.

கடந்த ஆண்டு இறுதியில் 11,305 கோடி ரூபாயாக இருந்த SIP-ன் மாதாந்திர பங்களிப்புகள் 211 கோடி அதிகரித்து ஜனவரியில் 11,516 கோடியாக இருந்தது என்ற செய்தியை பிசினஸ் டுடே வெளியிட்டுள்ளது. மேலும் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ள தகவலில் “ஜனவரி மாதத்தில் 26 லட்சம் புதிய SIP கணக்குகள் துவங்கப்பட்டிருக்கிறது என்றும் கடந்த 5 மாதங்களில் துவக்கப்பட்ட மாதாந்திர சராசரி கணக்குகளை (24 லட்சம்) காட்டிலும் இது அதிகம் என்று குறிப்பிட்டுள்ளது.

அதே போல் SIP-யில் நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்த சொத்துக்கள் (AUM) டிசம்பர் மாதத்தில் ரூ.5.65 லட்சம் கோடியாக இருந்து ஜனவரியில் ரூ.5.76 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

AMFI-ன் கருத்து என்ன சொல்கிறது

AMFI இன் தலைமை நிர்வாகி N S வெங்கடேஷ் அவர்கள் கூறுகையில் “யூனியன் பட்ஜெட் 2022-ல் கேபெக்ஸ் செலவின ஒதுக்கீடு ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும், வேலை வாய்ப்புகள் உருவாகும், ஆரோக்கியமான கார்ப்பரேட் வருவாய் வளர்ச்சி ஆகியவை மியூச்சுவல் ஃபண்ட் துறையில் மேலும் அதிக அளவிலான சேமிப்பைத் தூண்டும்” என்று குறிப்பிட்டார்.

நீண்ட கால இலக்கை முன்னிட்டு செய்யப்படும் சேமிப்புகளுக்கு முக்கிய விருப்பமாக அமைந்துள்ளது இந்த SIP வழி மியூச்சுவல் ஃபண்ட் அசெட்கிளாஸ். விலை உயர்வு ஏற்படும் பட்சத்தில் சில்லறை முதலீட்டாளர்கள் சுழற்சி முதலீட்டு உத்தியைப் பின்பற்றி, தங்கள் சேமிப்பை ஹைப்ரிட் வகைக்கு மாற்றுகிறார்கள்” என்று கூறினார்.