Tesla News Today -டெஸ்லா நிறுவனத்துடன் சுமார் 11 ஆண்டு காலம் பணிபுரிந்து வந்த பெண் திடீரென தனது துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Tesla News Today -ஸ்ரீலா வெங்கடரத்தினம் என்பவர், டெஸ்லா நிறுவனத்தில் துணை தலைவராக பணியாற்றிய வந்தார். இவர் 11 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு தற்பொழுது திடீரென தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். தன் லின்க்டின் பதிவில், தனது பணிக்காலம் அசாதாரணமாக இருந்ததாகவும், டெஸ்லாவின் வளர்ச்சியில் பங்கேற்றதை பெருமையாகக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 700 மில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக டெஸ்லா வளர்ச்சியை பார்த்து மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.வருடத்திற்கு 1.8 மில்லியனுக்கும் மேற்பட்ட கார்களை டெலிவரி செய்யும் நிறுவனத்தில் துணை தலைவராக பணியாற்றியது எனக்கு பெருமையாக இருக்கிறது என ஸ்ரீலா தனது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
டெஸ்லா நிறுவனத்தில் துணை தலைவராக பணியாற்றிய இரண்டு பெண்களில் ஒருவராக இருந்த ஸ்ரீலா, தற்போது அந்த பதவியிலிருந்து விலகியுள்ளார்.சமீப காலங்களில், டெஸ்லாவில் இருந்து பல மூத்த அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர், அதில் ரோகன் பட்டேல், ரிச் ஓட்டோ, மற்றும் ட்ரியோ பாக்ளினோ ஆகியோர் அடங்குகின்றனர்.
ஏப்ரல் மாதம், டெஸ்லாவின் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் மூத்த துணை தலைவராக இருந்த ட்ரியோ பாக்ளினோ தனது பதவியை விலகியுள்ளார், அவர் 18 ஆண்டுகள் டெஸ்லாவில் பணியாற்றியவர்.மேலும், ஏப்ரல் மாதத்தில் டெஸ்லா தனது நிறுவனத்தில் பணிபுரியும் 10 சதவீத ஊழியர்களை நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1,Click Here-2