Elon Musk Neuralink News -இனி பிறவியிலேயே பார்வையற்றவர்களாலும் பார்க்க முடியும், எலான் மஸ்க்கின் புதிய கண்டுபிடிப்பிற்கு அமெரிக்கா அனுமதி!
எலான்மஸ்க் அவர்களின் நியூராலிங்க் நிறுவனத்தின் ஆராய்ச்சியின் புதிய விளைவாக உருவாகி இருக்கும் 'Blindsight Device'-யின் ஆய்விற்கு அனுமதி வழங்கி இருக்கிறது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு (FDA).
இந்த டிவைஸ்சின் மூலம் பிறவியிலேயே பார்வையற்றவர்களாலும், கண் நரம்புகள் சரிவர செயல்படாதவர்களும் கூட, அவர்கள்து பார்வையை 100 சதவிகிதம் திரும்ப பெறமுடியுமாம். தற்போதைக்கு ஒரு குறைந்தபட்ச விஷன் இதன் மூலம் கிடைக்கும் எனவும் எதிர்காலங்களில் இந்த டிவைஸ்சின் மூலம் இயற்கையான கண்கள் கொடுக்கும் பார்வையை கொடுப்போம் எனவும் எலான் மஸ்க் உறுதியளித்து இருக்கிறார்.
சாத்தியமில்லாததை எல்லாம் சாதித்து காட்டுகின்ற குணமுடைய எலான் மஸ்க் இன்னும் இந்த உலகிற்கு தேவையான பல கண்டுபிடிப்புகளை விதைத்து செல்வார் என்பதில் எந்த வித ஐயமுமில்லை