• India
```

பிரபல Cargill நிறுவனம்...எதிர்கால நோக்கத்திற்காக...வேலை நீக்கத்தை அறிவித்து இருக்கிறது...!

Cargill Announced LayOffs

By Ramesh

Published on:  2024-12-03 20:48:43  |    82

Cargill Announced LayOffs - அமெரிக்காவை மையமாக செயல்பட்டு வரும் சர்வதேச நிறுவனம் ஆன Cargill கிட்டதட்ட 159 வருடங்களாக செயல்பாட்டில் இருந்து வருகிறது, விவசாய செயல்பாடுகள், உணவு, மருத்துவம், பாராமெச்சுட்டிகல்ஸ், தொழில் நிறுவனங்கள் என பல செயல்பாடுகளில் சர்வதேச அளவில் இயங்கி வரும் Cargill நிறுவனத்தில் கிட்டதட்ட 1,60,000 பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

வருடத்திற்கு கிட்டதட்ட 180 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டி வரும் Cargill நிறுவனம், எதிர்கால நோக்கங்களுக்காக ஒரு சில தவிர்க்க முடியாத முடிவுகளை எடுத்து இருக்கிறது, பொதுவாகவே அமெரிக்க நிறுவனங்கள் அனைத்தும் வருமான இழப்புகளை தவிர்ப்பதற்காகவும், இலாப நோக்கங்களுக்காகவும் வேலை நீக்கம் என்ற ஆயுதங்களை எப்போதும் கையில் வைத்து இருக்கின்றன.



அந்த வகையில் பிரபல Cargill நிறுவனமும் 2030 இலக்குகளை கருத்தில் கொண்டு நிறுவனத்தில் வேலை நீக்கங்களை முன்னெடுத்து இருக்கிறது, நிறுவனத்தில் பணிபுரியும் ஒட்டு மொத்த பணியாளர்களுள் 5 சதவிகித ஊழியர்களை நீக்க Cargill முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது, இந்த 5% என்பது கிட்டதட்ட ஆயிரம் பணியாளர்கள் ஆக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cargill யை பொறுத்தமட்டில் கடந்த 2021-22 நிதி ஆண்டைக் காட்டிலும், அதன் இலாபம் என்பது 2023-24 காலக்கட்டத்தில் பாதியாக குறைந்து இருக்கிறது, 2021-22 நிதி ஆண்டில் 6.7 பில்லியன் டாலர் இலாபம் ஈட்டிய Cargill, இந்த நிதி ஆண்டில் வெறும் 2.48 பில்லியன் டாலர் மட்டுமே இலாபம் ஈட்டி இருக்கிறது, இந்த இலாப இழப்பு தான் Cargill LayOff க்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

" மேலும் நிறுவனத்தின் இந்த வேலை நீக்கங்களால் நிறுவனத்தின் செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் இருக்காது எனவும் நிறுவனம் அறிவித்து இருக்கிறது "