• India
```

பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் ஆன Boeing...வேலை நீக்கத்தை அறிவித்து இருக்கிறது...!

Boeing LayOffs

By Ramesh

Published on:  2024-12-10 20:25:15  |    81

Boeing LayOffs - அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் விமான தயாரிப்பு நிறுவனம் ஆன Boeing சர்வதேச அளவில் விமானங்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது, கிட்டதட்ட 108 வருடங்களாக விமான தயாரிப்பில் ஈடுபட்டு வரும் Boeing நிறுவனம் விமானங்கள், ரோட்டர் கிராப்ட்ஸ், ராக்கெட்டுகள், செயற்கை கொள்கள், ஏவுகணைகள் உள்ளிட்டவைகளை தயாரித்து வருகின்றன.

சர்வதேச அளவில் Boeing நிறுவனத்தில் கிட்டத்தட்ட 1,70,688 ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர், கடந்த வருடத்தில் மட்டும் Boeing நிறுவனம் கிட்டத்தட்ட 77.79 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டி இருக்கிறது, நிறுவனத்தின் நிகர வருமானம் என்பது ஓரளவிற்குஅதிகரித்து இருந்தாலும் கூட, நிகர இலாபம் என்பது வெகுவாக சரிந்து இருப்பதாக தகவல் கூறுகிறது.




பொதுவாகவே அமெரிக்க நிறுவனங்கள், நிறுவனத்தின் இலாபத்தில் சமநிலை இல்லை எனில் எடுக்கும் முடிவு என்பது வேலை நீக்கம் ஆக தான் இருக்கும், அந்த வகையில் Boeing நிறுவன தலைமைகள் ஒன்று கூடி, சிறிது நாட்களுக்கு முன்பு ஒரு முடிவை எடுத்து இருந்தன, அதாவது நிறுவனத்தில் இருந்து கிட்டத்தட்ட 17,000 பேரை வேலையை விட்டு நீக்குவது என்பது தான் அந்த முடிவு.

அந்த முடிவின் தொடர்ச்சியாக தற்போது கலிபோர்னியாவில் உள்ள போயிங் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு 396 ஊழியர்களுக்கு வேலை நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறதாம், தொடர்ந்து உலகளாவிய அளவில் இந்த நீக்கங்கள் தொடருமாம், முழுக்க முழுக்க நிறுவனத்தின் வருமானச் சமநிலைக்காக மட்டுமே இந்த வேலை நீக்க முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்.