Battery Production News -சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு வருகின்ற எலக்ட்ரிக் வாகன பேட்டரிகள் மற்றும் பேட்டரி சம்பந்தப்பட்ட பொருள்களை தவிர்ப்பதற்காக, அமெரிக்கா உள்நாட்டு உற்பத்திக்கு 3 பில்லியன் டாலர்களை ஒதுக்கி இருக்கிறது.
எலக்ட்ரிக் வாகன பேட்டரி உற்பத்தியில் முன்னனி நாடாக திகழ்வது சீனா என அனைவரும் அறிந்ததே. அமெரிக்காவின் ஒரு சில முன்னனி நிறுவனங்களே சீனாவில் இருந்து தான் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகள் மற்றும் பேட்டரி சம்மந்தப்பட்ட ஒரு சில பொருள்களையும் பெற்று வந்தன. இதனை தொடர்ந்து கண்காணித்து வந்த அமெரிக்கா கடந்த 2021 முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு சில முக்கியமான சிகப்பு கோடு எச்சரிக்கை உடைய பொருள்களை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. முதற்கட்டமாக 2021-22 ஆண்டு காலக்கட்டத்தில் 1.8 பில்லியன் டாலர் அதற்காக ஒதுக்கப் பட்டது. தற்போது எலக்ட்ரிக் வாகன பேட்டரியின் முழுமையான உள்நாட்டு உற்பத்திக்காக 3 பில்லியன் டாலர்களை ஒதுக்கி இருக்கிறது வெள்ளை மாளிகை.
சரி, ஏன் பேட்டரிகளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டாம் என நினைக்கிறது அமெரிக்கா?
அமெரிக்கா பொதுவாக பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்ற பொருளை பிரண்டு வகைகளாக பிரித்து இறக்குமதி செய்யும். ஒன்று க்ரீன் வகை, இன்னொன்று ரெட் வகை, க்ரீன் வகைகளை எந்த தடைகளும் இல்லாமல் இறக்குமதி செய்யும். ஆனால் ரெட் வகைகளை இறக்குமதி செய்ய பல கடுமையான கண்டிசன்கள் இருக்கும். பேட்டரி போன்றவைகள் எல்லாம் ரெட் வகைகளில் தான். இவைகள் எல்லாம் நாட்டின் பாதுகாப்பிற்கு ஏதோ ஒரு வகையில் அச்சுருத்தலாக இருக்கும் என அமெரிக்கா கருதுகிறது. அதனால் தான் எலக்ட்ரிக் வாகன பேட்டரிகளை முழுக்க முழுக்க அமெரிக்கா உள்நாட்டிலேயே தயாரிக்கும் முன்னெடுப்பு எடுத்து இருக்கிறது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் ஒரே ஒரு பேட்டரிக்கே அமெரிக்கா இப்படி பயப்படுகிறது, ஆனால் இந்தியாவோ சீனாவின் 40 சதவிகிதம் தயாரிப்புகளை இறக்குமதி செய்து கொண்டு இருக்கிறது என்ன ஆகுமோ?