Global War: Tamil Nadu Textile Exports Losses Almost 5,000 Crores - கொரோனோ சூழல் கிட்ட தட்ட 10,000 க்கும் மேற்பட்ட சிறு குறு ஜவுளி நிறுவனங்களை மிகவும் உருக்குலைத்தது, கிட்டதட்ட 2019 முதல் 2021 வரை எந்த ஒரு ஜவுளி நிறுவனங்களும் 10 சதவிகிதம் கூட இயங்க முடியாமல் போனது, கிட்டதட்ட அந்த இரண்டு வருடங்களில் மட்டும் தமிழக ஜவுளி வர்த்தகத்தில் கிட்ட தட்ட 75,000 கோடி முடங்கியது, 4 இலட்சம் ஜவுளி தொழில் ஊழியர்கள் வேலை இல்லாமல் திண்டாட்டம் கண்டனர்.
பல இலட்சங்கள் இழப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு, ஜவுளி நிறுவனங்கள் 2021-22 காலக்கட்டங்களில் நிறுவனத்தை மீண்டும் 100 சதவிகிதம் ஊழியர்களுடன் மீண்டும் இயக்கினர், பல்வேறு இக்கட்டான சூழலுக்கு பின்னர் 2022 யின் கடைசி கட்டத்தில் ஜவுளி நிறுவனங்கள் இலாபத்தில் இயங்க ஆரம்பித்தன, அதற்குள் ஆரம்பித்தது உலகளாவிய போர்கள்,
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் போர், பாலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் போர், சூடானிஸ் சிவில் வார், மியான்மர் சிவில் வார், ஹைத்தி ஹேங் வயலன்ஸ் என உலக நாடுகளிடையே நிலவும் போர் பதற்றத்தால் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் முடங்கி கிடக்கிறது, திருப்பூர், கரூரில் இருந்து மட்டும் ஐரோப்பிய நாடுகளிடையே கிட்டதட்ட வருடத்திற்கு ரூ 6000 - 7000 கோடி வரை ஜவுளி வர்த்தகம் நடக்கும்,
ஆனால் தற்போது நடக்கும் போர்களினால் ஐரோப்பிய நாடுகளிடையே ஜவுளி நுகர்வுகள் கிட்ட தட்ட 70 சதவிகிதம் குறைந்து இருக்கிறது, இதனால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் ஜவுளிகளும் மொத்தமாக முடங்கி விட்டன, 7000 கோடி ஜவுளி ஏற்றுமதியில் வர்த்தகம் செய்து வந்த திருப்பூர், கரூர் மாவட்டங்கள் தற்போது வருடத்திற்கு ரூ 1000 கோடி வர்த்தகத்திற்கே திணறி வருவது குறிப்பிடத்தக்கது.