• India

12500 ஊழியர்களை காரணமின்றி...பணியில் இருந்து தூக்கிய Dell நிறுவனம்...கதறும் ஊழியர்கள்...!

Dell Fired 12500 Employees

By Ramesh

Published on:  2024-11-29 13:56:56  |    25

Dell Fired 12,500 Employees - அமரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை மையமாக கொண்டு செயல்படும் Dell நிறுவனம், பெர்சனல் கம்ப்யூட்டர்ஸ், டேட்டா ஸ்டோரேஜ் டிவைஸ், செர்வர்ஸ், நெட்வொர்க் ஸ்விட்சஸ், சாப்ட்வேர்ஸ் உள்ளிட்டவைகளை தயாரித்து உலகளாவிய அளவில் சந்தைப்படுத்தி வருகிறது, கிட்டதட்ட 40 வருடங்களாக உலகச்சந்தைகளில் தங்கள் மார்க்கெட்டை விட்டுக் கொடுக்காமல் பிடித்து வைத்து இருக்கிறது.

லெனோவோ, HP நிறுவனங்களுக்கு அடுத்ததாக உலகில் அதிக அளவில் பெர்சனல் கம்யூட்டர்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனமாக Dell செயல்பட்டு வருகிறது, உலகளாவிய அளவில் கிட்டதட்ட 1,20,000 ஊழியர்களை கொண்டு இயங்கி வரும் Dell நிறுவனம், வருடத்திற்கு கிட்டத்தட்ட 90 பில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டி வருகிறது, அதில் நிகர இலாபம் என்பது கிட்டதட்ட 4 பில்லியன் டாலர்களாக இருக்க கூடும்.



சமீப காலமாக உலகளாவிய அளவில் டெல் நிறுவனத்தின் வருமானமும், இலாபமும் வெகுவாக சரிந்து இருக்கிறது, என்ன முடிவெடுப்பது என யோசித்த டெல் நிறுவனத்தின் தலைமைகள் ஒன்று கூடி பேசி, தயாரிப்பு, ஹார்டுவேர், அசம்பிளி என எந்த ஊழியர்களின் டிபார்ட்மெண்டையும் கை வைக்காமல் நேரடியாக விற்பனை ஊழியர்களை குறைக்கலாம் என முடிவு செய்தது.

அந்த வகையில் உலகளாவிய அளவில் விற்பனை செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்த கிட்டதட்ட 12,500 ஊழியர்களை நீக்கி கடுமையான முடிவுகளை டெல் எடுத்து இருக்கிறது, சமநிலைப்படுத்துதல், நவீனமயமாக்கல் என்ற பெயரில் டெல் நிறுவனத்தின் பல விற்பனை மேலாளர்களும், ஊழியர்களும் நீக்கப்பட்டு இருப்பது அவர்கள் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக அமைந்து இருக்கிறது.