வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பானது 9 காசுகள் வலுவடைந்து 73.24-ல் நிலைபெற்று உள்ளது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு:

இது தொடர்பாக வர்த்தகர்கள் கூறியபோது, பங்குச் சந்தையில் ஒருவித சாதகமான நிலை தென்பட்டது. மேலும், டாலருக்கான தேவை சந்தையில் குறைந்தே காணப்பட்டது. இதன் காரணத்தினால் இந்திய ரூபாயின் மதிப்பு அந்நியச் செலாவணி சந்தையில் வலுவடைந்து இருந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தின் ஆரம்பத்தில் ரூபாயின் மதிப்பின் ஏற்ற இறக்கம் மிகவும் குறுகிய அளவில் தான் காணப்பட்டது. வர்த்தகத்தின் ஆரம்பத்தில் இந்திய ரூபாயின் மதிப்பானது 73.29 ஆக இருந்தது.

இந்த நிலை மேலும் வலுவடைந்து வா்த்தகத்தினுடைய இறுதி கட்டத்தில் ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயா்ந்து 73.24 ஆக ஆனது. முந்தைய வர்த்தக தினமான புதன்கிழமை அன்று ரூபாயின் மதிப்பு 73.33 ஆக இருந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பானது தொடா்ந்து 2-வது நாளாக ஏற்றம் கண்டு உள்ளது என வா்த்தகா்கள் தெரிவித்து உள்ளனர்.

மூலதனச் சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தின் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் கிட்டத்தட்ட 1,093.81 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கி உள்ளதாக பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

சா்வதேச முன்பேர சந்தையின் கச்சா எண்ணெய் விலை ஆனது பேரலுக்கு 0.88% அதிகரித்து 42.36 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Author – Gurusanjeev Sivakumar