இந்தியாவின் ஜிடிபி விகிதம் ஆனது நடப்பு நிதி ஆண்டில் 9.5 சதவீதம் வீழ்ச்சி காண உள்ளதாக ரிசர்வ வங்கி கூட்டத்தில் கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

ரிசர்வ் வங்கியின் கணிப்பு:

கொரோனாவின் தாக்கம் நாட்டில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொருளாதார வளர்ச்சி குறித்தான நடவடிக்கைகளானது பாதிக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக ஜிடிபியின் விகிதம் சரியக்கூடும். எப்படி என்றால் வருகின்ற நான்காவது காலாண்டில் தான் ஜிடிபி ஆனது வளர்ச்சி காணலாம் என கூறப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் வளர்ச்சி விகிதமானது கடந்த 40 ஆண்டில் இல்லாத அளவுவுக்கு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. தற்சமயம் நாடு தழுவிய ஊரடங்கு படிப்படியாக தளர்வுகளை அளித்து வருகிறது.

இதனால் வருகின்ற காலாண்டில் வளர்ச்சி விகிதம் ஆனது சற்று மேம்படக்கூடும். எப்படி இருந்தாலும் தற்போது நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி விகிதம் ஆனது 9.5 சதவீதம் சரியலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்சமயம் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஊரடங்கில் சற்று தளர்வுகள் கொடுக்கப்பட்டு இருந்தாலும், வளர்ச்சியானது மெதுவாக தான் காணப்படுகிறது. மேலும் நிபுணர்கள் கூறுகையில், இந்த வீழ்ச்சி இந்த கொரோனாவின் காரணமாக மட்டும் இல்லை, கொரோனாவிற்கு முன்பாகவே பொருளாதாரம் கடுமையான சரிவைக் கண்டது குறிப்பிடத்தது.

இருப்பினும் கடந்த மே மாதம் இந்திய அரசு பொருளாதாரத்தை ஊக்குவிக்கின்ற வகையில், ரூ.20 லட்சம் கோடியை நிதி ஊக்கமாக கொடுத்தது. எனவே அரசின் கூடுதலான ஊக்கத்தொகை ஆனது, ஆழ்ந்த வீழ்ச்சியில் இருந்து இந்தியாவை காப்பாற்றும்.

இதற்கிடையே தான் தற்போது RBI வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இது 4% ஆகவே உள்ளது. இதே போல ரிவர்ஸ் விகிதத்திலும் எந்த மாற்றமும் செய்யவில்லை.

Author – Gurusanjeev Sivakumar