அதிக அளவு இன்டர்நெட் யூசர்களை கொண்டிருக்கும் பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது. நம் நாட்டில் 1.18 பில்லியன் டெலிகாம் சந்தாதாரர்கள் இருக்கின்றனர். அவர்களில் சுமார் 765 மில்லியன் பேர் இன்டர்நெட் சேவையை பெற்று பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு 10 ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டில் 15க்கும் மேல் டெலிகாம் சேவை வழங்கிய ஆபரேட்டர்கள் இருந்தனர். ஆனால் இன்றோ முதன்மையான நான்கு ஆபரேட்டர்கள் மட்டுமே உள்ளனர். வோடபோன் ஐடியா, சந்தையில் அதன் சரிவை தவிர்ப்பதற்காக / அல்லது தப்புவதற்காக பின் வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பல ஆண்டுகளாகவே பணம் மற்றும் வாடிக்கையாளர்களை இழந்து வருகிற வோடஃபோன் ஐடியா இந்த கடைசி 5 வருடங்களில் பெரிதாக லாபம் எதுவும் ஈட்டவில்லை. வெறும் 253 மில்லியனுக்கும் குறைவாகவே வாடிக்கையாளர்கள் இப்போது வோடஃபோன் ஐடியாவில் இருக்கின்றனர். நிறுவனத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, நீதிமன்றங்களில் இருந்து நிவாரணம் வழங்கப்படவில்லை என்றால் ஆபரேட்டர் கடையை மூடிவிடுவார் என்று கடந்த ஆண்டு கூறியிருந்தார்.

கன்வர்ஜென்ஸ் கேடலிஸ்ட் என்ற ஆலோசனை நிறுவனத்தின் பங்குதாரரான ஜெயந்த் கொல்லா கூறுகையில் “பெரும்பான்மை பங்குகளை விட்டுக்கொடுப்பது என்பது கடைசி முயற்சி” என்கிறார்.

வோடஃபோன் ஐடியாவின் பங்குகள் எங்கெங்கு விடப்படும்?

வோடஃபோன் ஐடியாவின் பங்குகளில் மூன்றில் ஒரு பங்கினை அரசு தற்போது எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. சுமார் 36% நலிவடைந்த ஆப்பரேட்டரின் பங்குகள், மீதமுள்ள பங்குகளில் 28.5% அதன் கூட்டு நிறுவன பங்காளர்களான வோடஃபோன் குழுமத்திற்கும், 17.8% இந்தியாவின் ஆதித்யா பிர்லா குழுமத்திற்கும் என்று விட்டுச் செல்கிறது.

டெலிகாம் துறையில் அதிரடி சரிவிற்கு காரணம்?

வோடஃபோன் மட்டுமல்ல இது போன்று பல ஆப்ரேட்டர்களின் சரிவிற்கும் ஆதிப்புள்ளியாய் அமைந்தது 2017-ம் ஆண்டு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ. அதிரடியாய் குறைக்கப்பட்ட கட்டணங்கள், அதுவரை இருந்து வந்த அழைப்புகளுக்கான சந்தையை டேட்டாவுக்கான சந்தையாக மாற்றியது ஆகியவை மீண்டு எழ முடியாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய விலைப் போரை ஏற்படுத்தியது.

அரசு இதன் பங்குகளை ஏற்பது குறித்து பலருக்கும் பல கேள்விகள் உண்டு. ஏற்கெனவே அரசின் தொலைத்தொடர்பு நிறுவனம் நஷ்டத்தில் இருக்கும்போது இன்னொரு நிறுவனத்தையும் எடுத்துக்கொள்வது ஏற்புடையதா என்று சிலர் கேள்வி வைக்கின்றனர். இன்னொரு சாரர், வோடஃபோன் பின்வாங்குவது அரசுக்கு அதன் தொலைத்தொடர்பு தகுதிச் சான்று மற்றும் சொத்துகளை மேம்படுத்த உதவும் என்று நம்புகிறார்கள். பின்னர் அதை வைத்து முதலீட்டாளருக்கு விற்கவும் முடியும். இப்படியாக பல தரப்பு விவாதங்களையும் உள்வாங்கி இருக்கும் தொலைத்தொடர்பு சந்தையில் வோடஃபோன் ஐடியாவின் இனி வரும் நிலை என்ன என்பதை பொறுத்திருந்தே பாப்போம்.