அந்நியச் செலாவணி சந்தை வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகாரன இந்திய ரூபாயின் மதிப்பானது RBI-யின் வட்டி விகித அறிவிப்பை அடுத்து 8 காசுகள் வலுப்பெற்றுள்ளது.

இது தொடர்பாக வர்த்தகர்கள் கூறியபோது, வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை மாற்றம் செய்யாமல் 4% என்ற அளவிலேயே வைத்திருக்க RBI-யின் நிதிக் கொள்கை குழுவானது முடிவெடுத்து உள்ளது. கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டு உள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவி தேவைப்படும் சமயத்தில் வட்டி விகிதங்களை குறைப்பதற்கும் தயார் நிலையில் உள்ளதாக ரிசா்வ் வங்கியானது கூறி உள்ளது.

RBI-யின் இந்த நிலைப்பாட்டை தொடர்ந்து, அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது வலுப்பெற்றது. வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தின் ஆரம்பத்தில் ரூபாயின் மதிப்பானது 73.21 ஆக இருந்தது. மேலும் அதிகபட்சமாக 73.02 வரை ஏற்றம் அடைந்தது. வா்த்தகத்தின் இறுதி கட்டத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது 8 காசுகள் உயா்ந்து 73.16-ல் நிலைபெற்றது.

வியாழக்கிழமை நிலவரப்படி இந்திய ரூபாயின் மதிப்பானது ரூ.73.24 ஆக இருந்ததாக வா்த்தகா்கள் தெரிவித்தார்கள். மூலதனச் சந்தையில் வியாழக்கிழமை நிகழ்ந்த வா்த்தகத்தில், அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் 978.37 கோடி ரூபாய் மதிப்புடைய பங்குகளை வாங்கி உள்ளதாக பங்குச் சந்தையின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.

அதேபோல, சா்வதேச முன்பேர சந்தையில், பிரெண்ட் கச்சா எண்ணெயினுடைய விலையானது பேரலுக்கு 0.95% குறைந்து 42.93 டாலர் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Author – Gurusanjeev Sivakumar