இந்தியாவில் கோவிட்-19 கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக குறைக்கப்பட்டு வரும் இந்நிலையில் விமானப் பயணிகளினுடைய எண்ணிக்கை ஆனது வேகமாக அதிகரித்து வரும் இந்த நேரத்தில் மத்திய அரசு உள்நாட்டு நிறுவனங்களுக்கு, உள்நாட்டு விமானச் சேவையில் 80% வரை பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனங்களினுடைய பங்குகள் ஆனது சிறந்த வளர்ச்சி அடைந்து உள்ளது.

கடந்த இரண்டு மாதமாக நாட்டினுடைய போக்குவரத்து மற்றும் சேவைத் துறை பெரிய அளவிலான வளர்ச்சியை கண்டு வருகிறது. மேலும், நடுத்தர மக்கள் வேலைக்காகவும், வர்த்தகத்திற்காகவும் அதிக அளவிலான பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்கள். இதன் காரணமாக சாலை மற்றும் விமானப் போக்குவரத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசு கூடுதல் தளர்வினை அளித்துள்ளது.

மத்திய அரசு விமானப் போக்குவரத்தில் பயணிகளின் எண்ணிக்கையை 70% இருந்து 80% வரை உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக நாட்டினுடைய முன்னணி மலிவு விலை விமானப் போக்குவரத்து சேவை நிறுவனத்தில் உள்ள ஸ்பைஸ்ஜெட் பங்குகள் ஆனது தடாலடியாகச் சுமார் 11.86% வளர்ச்சி கண்டு ஒரு பங்கு விலை ஆனது ரூ.91 வரை உயர்ந்தது.

இந்தியாவில் மற்ற துறைகளை விட விமானப் போக்குவரத்தில் கோவிட்-19 கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும் நிலையில் மே மாதம் 25-ம் தேதியில் வெறும் 30000 உள்நாட்டுப் பயணிகள் மட்டும் தான் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் சுமார் 2.52 லட்சம் ஆக அதன் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

Author – Gurusanjeev Sivakumar