கடந்த நவம்பர் மாதம் மாருதி நிறுவனத்தின் கார் விற்பனை ஆனது குறைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாருதி நிறுவனம்:

கோவிட்-19 ஊரடங்கு காலத்திற்குப் பின்னர் சிறந்து விளங்கிய கார் விற்பனை ஆனது, பண்டிகை கால கட்டத்தில் மேலும் அதிகரித்தது. ஆனால், கடந்த நவம்பர் மாத காலகட்டத்தில் அது 2.4 % குறைந்து உள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாத காலகட்டத்தில் 1,39,133 கார்களை விற்ற மாருதி நிறுவனத்தால், கடந்த நவம்பர் மாதம் 1,35,775 கார்களை மட்டும் தான் விற்க முடிந்ததாக கூறப்பட்டு உள்ளது.

அதே போல், அக்டோபர் மாதம் காலக்கட்டத்தில் மாருதி நிறுவனத்தினுடைய கார் விற்பனை ஆனது மிகவும் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 63 ஆயிரத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு விற்பனை ஆனது குறைந்தாலும், கடந்த நவம்பர் மாதம் கார் ஏற்றுமதி ஆனது 29.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Author – Gurusanjeev Sivakumar