இந்திய ஆட்டோமொபைல் சந்தை நிலவரம் எப்போதுமே சூடு பிடித்தே இருக்கும். நம் நாட்டில் விற்கப்படும் கார்களில் 90% உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவது இருந்தாலும் வெளிநாட்டு நிறுவனங்களின் கார்கள் அவை. இந்த சூழ்நிலையில் வெளிநாட்டு நிறுவனமான ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனையை முந்தியது டாடா மோட்டார்ஸ்.

இந்திய வரலாற்றிலேயே 3வது முறையாக 30 லட்சம் வாகனங்கள் விற்பனை

செமி கண்டக்டர் தட்டுப்பாடு, கொரோனா 2வது அலை என பல சவால்களை எதிர்கொண்டு மீண்டெழுந்துள்ளது முடிந்த 2021-ம் ஆண்டு. 2021-ம் ஆண்டு முடிவுற்ற நிலையில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முடிந்த ஆண்டின் விற்பனை விபரங்களை வெளியிடத் தொடங்கியுள்ளன. அதன்படி 2020ஆம் ஆண்டை விட ஏறக்குறைய 27% அதிகம் விற்பனை நடைபெற்றுள்ளது என்று தெரிகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்திய வரலாற்றிலேயே 3வது முறையாக 30 லட்சம் வாகனங்கள் சென்ற ஆண்டில் தான் விற்பனை ஆகியுள்ளன.

டிசம்பர் 2021-ல் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்த கார்கள் எத்தனை?

குறிப்பிடத்தகுந்த இந்த வர்த்தக கணக்கெடுப்பில் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்கள் எனும்போது ஹூண்டாய் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை தனதாக்கியுள்ளது டாடா மோட்டார்ஸ். வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர் 2021ல் மட்டும் டாடா மோட்டார்ஸ் சுமார் 3 லட்சத்து 53 ஆயிரம் கார்களை விற்றுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 23 ஆயிரத்து முந்நூற்றுப் பன்னிரெண்டு.

இன்னும் ஒரு மகிழ்ச்சி செய்தியாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எலக்ட்ரிக் கார்களுக்கு மக்களிடையே மோகம் அதிகரித்து வருகிறது. டிசம்பர் 2021-ல் சுமார் 2,255 எலக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்றுள்ளது.