இந்தியாவில் உள்ள உள்நாட்டு உற்பத்தியினை சர்வதேச அளவிலான போட்டித்தன்மை உடையதாக மாற்றவும் உள்நாட்டில் உற்பத்தி செய்பவர்ககளை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளது.

உற்பத்திகளை மையமாய் கொண்டு இந்த திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை ஆனது வழங்கப்படும். மேலும், இந்த திட்டத்திற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கி உள்ளது. இதற்கென, பத்து உற்பத்தித் துறைகள் ஆனது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த துறையில் 2 லட்சம் கோடி ருபாய் வரையிலான ஊக்கத்தொகை ஆனது வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் வாயிலாக சர்வதேச நாடுகளில் இருந்து அதிக அளவில் முதலீட்டை ஈர்க்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜவுளிகள், மருந்துகள், எலெக்ட்ரானிக் சாதனம், எஃகு, தொலைத் தொடர்பு, உணவுப் பொருள், செல் பேட்டரி, சோலார் போட்டோவோல்டிக் போன்ற துறைகள் இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது, பிரதமர் மோடி அவர்களின் சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலமாக உள்நாட்டு உற்பத்தியினை மேம்படுத்துவதற்கும், அதற்கென கொள்கையினை உருவாக்குவதற்கும் நடவடிக்கைகள் ஆனது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உற்பத்தியினை மேம்படுத்தி, ஏற்றுமதியினை அதிகரிக்க செய்து சர்வதேச அளவிலாக இந்தியாவினுடைய உற்பத்தித் துறையினை சவாலான வகையில் உருவாக்க முடியும் என்றும் முதலீடுகள் ஆனது அதிக அளவில் கிடைக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Author – Gurusanjeev Sivakumar