வாட்டர் ரெசிஸ்டன்ட் ஐபோன் என்று விளம்பரம் செய்தது குறித்து, இத்தாலியில் ஆப்பிள் நிறுவனத்துக்கு 12 மில்லியன் டாலர் ஆனது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம்:

பலவித ஐபோன் மாடல்கள் வாட்டர் ரெசிஸ்டன்ட் என்று கூறப்படும் நீர்காப்புத் தன்மை உள்ளவை என்று விளம்பரம் செய்ததாகவும், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டும் தான் அவ்வாறு பாதுகாப்பானதாக இருக்கும் என்பதை அந்நிறுவனம் விளம்பரம் செய்ய தவறி விட்டதாக இத்தாலிய வர்த்தக ஒழுங்குமுறை ஆணையம் கூறி உள்ளது.

வாட்டர் ரெசிஸ்டன்ட் என்று கூறி விளம்பரம் செய்துவிட்டு, பின்னர் திரவங்களால் சேதம் ஆனால் அதற்கு வாரண்டி கிடையாது என DISCLAIMER-ல் கூறப்படுவது வாடிக்கையாளரை ஏய்க்கும் விதமான வேலை என இத்தாலிய வர்த்தக ஒழுங்குமுறை ஆணையம் கூறி உள்ளது.

இதன் காரணமாக இத்தாலியில் ஆப்பிள் நிறுவனத்திற்கு 12 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Author – Gurusanjeev Sivakumar