குடும்பத்தில், பொது இடங்களில், பணிபுரியும் இடங்களில், சமுதாயத்தில் என பல இடங்களிலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் சவால்களும் அதிகம். அவற்றை போராடி வெல்லும் வலிமை உடைய பெண்கள் பலர் இருந்தாலும் அவர்களுக்கு சரியான தளம் அமையாமல் இருக்கின்றனர். திருவள்ளூர் மாவட்ட சமூகநல அலுவலர் லலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கீழ்க்கண்ட பல தகவல்களை அவர்கள் கொடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு ஒன் ஸ்டாப் மையம்

திருவள்ளூர் மாவட்டத்தில் ‘சகி’ என்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நல மையம் ஒன்று செயல்படுகிறது. இங்கு பணிபுரிய திருவள்ளூர் மாவட்டத்தில் நிரந்தர முகவரி கொண்ட பெண்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். சகி ஒன் ஸ்டாப் மைய நிர்வாக பதவி, வழக்கு பணியாளர் பணியிடம், பல்நோக்கு உதவியாளர் பணியிடம் ஆகிய பணியிடங்களுக்கு பெண் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள்.

நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் பற்றிய விபரம்

இதற்கு மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்தில் இம்மாதம் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சமூகப்பணியில் முதுகலைப்பட்டம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் குறைந்தபட்சம் 4 மற்றும் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம், சமூகப்பணியில் இளங்களைப்பட்டம், சமைக்கத்தெரிந்திருத்தல், ஷிஃப்ட்களில் பணிபுரிய தயாராக இருத்தல் என்று ஒவ்வொரு பதவிக்கும் சில குறிப்பிட்ட தகுதிகள் தேவையாக உள்ளது. மேற்கண்ட பணிகளுக்கு மாத சம்பளம் குறைந்த பட்சம் ரூ.6400-லிருந்து அதிகபட்சம் ரூ.30000-வரை இருக்கும்.

‘சகி’ ஒன் ஸ்டாப் நல மையம் தொடர்புகொள்ள

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் கட்டாயம் உள்ளூரை சேர்ந்தவராக மட்டுமே இருக்க வேண்டும். மேலும் விபரங்கள் தேவைப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரிலோ 044-29896049 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு கேட்கலாம்.