லட்சுமி விலாஸ் வங்கி:

இந்தியாவின் முன்னணி வங்கியில் ஒன்றான லட்சுமி விலாஸ் வங்கி, வாராக்கடன் சுமை காரணம், நிர்வாகக் குழுவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாகவும் ரிசர்வ் வங்கி மற்றும் செபி கட்டுப்பாட்டிற்குள் வந்ததால் இவ்வங்கியினுடைய பணப் பரிமாற்றத்தின் மீது கட்டுப்பாடுகள் ஆனது விதிக்கப்பட்டு, இவ்வங்கி மற்றும் வங்கியினுடைய வாடிக்கையாளர்கள் பணத்தைக் காப்பாற்றுவதற்காகவும் லட்சுமி விலாஸ் வங்கியைச் சிங்கப்பூரைத் தலைமை இடமாகக் கொண்ட DBS வங்கி உடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது.

மேலும், இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் DBS வங்கி இணைப்பிற்கான பணிகள் இன்று முதல் துவங்கப்படுகிறது. எனவே, நவம்பர் 27-ம் தேதி (நாளை) முதல் லட்சுமி விலாஸ் வங்கி, DBS வங்கி ஆக மாற்றப்பட உள்ளது. மேலும், இதே நாளில் ரிசர்வ் வங்கியின் கோரிக்கை மூலமாக லட்சுமி விலாஸ் வங்கியின் மீது உள்ள ஒரு மாத மோராடோரியம் கட்டுப்பாடும் நீக்கப்படுகிறது.

மேலும், நவம்பர் 27-ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியின் கிளைகள் ஆனது DBS வங்கி கிளைகள் ஆக இயங்க துவங்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

இதேபோல, நவம்பர் 27-ம் தேதி முதல் லட்சுமி விலாஸ் வங்கியினுடைய வாடிக்கையாளர்கள் DBS வங்கியினுடைய வாடிக்கையாளர்களாக மாறப்படுகிறார்கள். மேலும், முதலீடுகள், டெப்பாசிட் தொகை, வங்கி கணக்கிலுள்ள இருப்புத் தொகை என்று அனைத்துமே எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி DBS வங்கியின் பெயரில் இயக்கிக்கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் DBS வங்கி இணைப்பானது இந்த இரண்டு வங்கிக்கும் பெரிய அளவில் லாபம் உள்ளது. இந்த இணைப்பின் மூலமாக லட்சுமி விலாஸ் வங்கியின் கிளைகள், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், வர்த்தகம் என DBS வங்கியினுடைய ரீடைல் வர்த்தகங்கள் விரிவாக்கம் செய்யப் பெரிய அளவில் வாய்ப்பு உருவாகி உள்ளது.

லட்சுமி விலாஸ் வங்கி ஆனது அதீத வாராக்கடன் மற்றும் நிர்வாகப் பிரச்சனையிலிருந்து DBS வங்கியின் மூலமாக காப்பாற்றப்படும் என்றும், அதுமட்டுமின்றி லட்சுமி விலாஸ் வங்கியினுடைய ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப் போவது இல்லை என்பதன் காரணமாக அதன் நிர்வாகத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. அதேபோல, ஊழியர்களினுடைய சம்பளத்திலும் எந்தவித மாற்றமும் இருக்காது என்று] கூறப்பட்டுள்ளது.

Author – Gurusanjeev Sivakumar